குறைகேட்பு கூட்டத்தில் அதிகாரிகள் 'ஆப்சென்ட் '

விழுப்புரம்: விழுப்புரத்தில் நடந்த விவசாயிகள் குறைகேட்பு கூட்டத்தில் அதிகாரிகள் வராததால் விவசாயிகள் அதிருப்தி அடைந்தனர்.

கோட்ட அளவிலான விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம், விழுப்புரம் தாலுகா அலுவலகத்தில், ஆர்.டி.ஓ., முருகேசன் தலைமையில் நேற்று நடந்தது.

அப்போது பேசிய விவசாயிகள், 'நாங்கள் விவசாயம் சார்ந்த புகார்களை தெரிவித்தாலும், அதை கேட்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டிய பி.டி.ஓ.,க்கள், துறை சார்ந்த அதிகாரிகள் இங்கு வருவதில்லை. இப்படி இருந்தால் பிரச்னைகள் எப்படி தெரிந்து நடவடிக்கை எடுக்க முடியும். அரசு கணக்கிற்காக பெயரளவில் தான் இந்த கூட்டம் நடக்கிறது' என்றனர்.

அடுத்த கூட்டத்தில் துறை சார்ந்த அலுவலர்கள் கண்டிப்பாக பங்கேற்பர் என, ஆர்.டி.ஓ., விவசாயிகளை சமாதானம் செய்தார். தொடர்ந்து, 'விவசாயிகள் கூறிய பிரச்னைகள் அனைத்தும் உரிய முறையில் விசாரணை செய்து, தீர்வு காண்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.

Advertisement