சட்டத்துறையில்  வாய்ப்புகள் ஏராளம் 

சட்ட படிப்புகளின் எதிர்காலம் என்ற தலைப்பில் கே.எம்.சி., சட்டக்கல்லுாரி முதல்வர் சவுந்தரபாண்டியன் பேசியதாவது:

சட்ட படிப்புகளை படிக்க வயது வரம்பு இல்லை என்பதால், விரும்பியவர்கள் சட்டம் படிக்கலாம். கடந்த பத்தாண்டுகளுக்கு முன்பு இருந்ததை காட்டிலும், சட்டத்துறையில் பல்வேறு வளர்ச்சிகளும், மாற்றங்களும் ஏற்பட்டுள்ளன.

நாட்டில் பல்வேறு பிரிவுகளின் கீழ், வழக்குகள் நிலுவையில் உள்ளன. தனிநபர் மட்டுமின்றி, சுற்றுச்சூழல், வங்கி, இன்சூரன்ஸ், கல்விநிறுவனங்கள் என அனைத்திற்குள் வழக்கறிஞர்கள் தேவை அதிகம் உள்ளன. வழக்கறிஞர்களாக மட்டுமின்றி, சட்ட ஆலோசகர்கள், நீதிபதி உள்ளிட்ட பல்வேறு அதிகாரமிக்க பதவிகளிலும் அமரமுடியும். இத்தொழில் மேற்கொள்பவர்கள் பிறரை சார்ந்து இல்லாமல், சுயமாக சுதந்திரமாக செயல்படமுடியும். தகுதிகளையும், திறன்களையும் வளர்த்துக்கொண்டால், ஒரு மணி நேரத்திற்கு லட்சத்தில் சம்பாதிக்கலாம்.

இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement