'எந்தப்பணியாக இருந்தாலும் கடினமாக உழைத்தால் வெற்றி நிச்சயம்'

கடல்சார் கல்வி குறித்து ஆர்.எல்., நாட்டிக்கல் சயின்ஸ் கல்லுாரியின் பாலன் முத்துராமலிங்கம் பேசியதாவது:'மெர்சண்ட் நேவி' பணிக்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. அரசு இத்துறையினருக்கு பல்வேறு சலுகைகளை வழங்குகிறது. மாணவியரும் பயில முடியும். ஏராளமான கல்வி உதவித்தொகை திட்டங்கள் இப்படிப்புக்கு உள்ளது.
இதற்கான பல்கலை நடத்தும் நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெற்றால் போதும். இன்ஜினியரிங், நேவிகேஷன் என, துறைகள் உள்ளன. எந்த ஒரு பணியாக இருந்தாலும், துவக்கத்தில் கடினமாக தான் இருக்கும் ஆனால், கற்றுக்கொண்டால் எளிது. கடல் சார் படிப்புகளை முடித்தால், அதிக ஊதியம் கிடைக்கும். உலகின் எந்த மூலைக்கும் செல்லலாம். உள்ளூரிலேயே நமக்கு வாய்ப்புக்கள் அதிகம் கிடைக்கும்.இவ்வாறு, அவர் பேசினார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஜவுளிக்கழிவு மறுசுழற்சி செய்யும் முறை: திருப்பூருக்கு பிரதமர் மோடி பாராட்டு
-
ஆட்டிசம் பாதித்த சிறுவனுக்கு அடி: ஆசிரியர் கைது; பள்ளிக்கு சீல்
-
'நான் பழைய மூர்த்தி இல்லை' செல்லுார் ராஜூவுக்கு அமைச்சர் மூர்த்தி பதில்
-
நலத்திட்ட உதவி வழங்கல்
-
ரத்ததான முகாம்
-
இளையான்குடியில் தரமின்றி கட்டப்படும் நுாலக கட்டடம்
Advertisement
Advertisement