இளையான்குடியில் தரமின்றி கட்டப்படும் நுாலக கட்டடம்
இளையான்குடி : இளையான்குடி பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் தரமற்ற முறையில் வணிக வளாகம் கட்டப்படுவதாக புகார் தெரிவிக்கின்றனர்.
இளையான்குடி பேரூராட்சி பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே செயல்பட்டு வந்த பழைய பேரூராட்சி அலுவலக கட்டடம் இடிக்கப்பட்டு தற்போது நூலக கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. இக்கட்டடத்தை தரமற்ற பொருட்களைக் கொண்டு கட்டுவதால் கட்டடத்தின் உறுதித் தன்மை கேள்விக்குறியாகி உள்ளதாக புகார் தெரிவிக்கின்றனர்.
அ.தி.மு.க., பேரூர் செயலாளர் நாகூர் மீரா கூறியதாவது, இளையான்குடி பழைய பேரூராட்சி அலுவலகத்தை இடித்துவிட்டு, அங்கு அரசு மருத்துவமனை விரிவாக்கம் செய்யவேண்டும். ஆனால் நூலக கட்டடத்தை தரமற்ற முறையில் கட்டி வருகின்றனர், என்றார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement