'வெளிநாட்டு கல்வி அனைவருக்கும் சாத்தியமே'

வெளிநாட்டு கல்வி குறித்து ஐ.டி.பி., எஜூகேஷன் ஆஸ்திரேலியா தமிழக தலைவர் தீபா சீனிவாசன் பேசியதாவது:வெளிநாட்டுக்கு சென்று படிப்பது அனைவருக்கும் சாத்தியமே. இந்தியாவின் உயரிய கல்வி நிறுவனங்களான ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., ஆகியவற்றில் இடம் கிடைக்காதவர்களுக்கு வெளிநாட்டு கல்வி வரப்பிரசாதம். வெளிநாடுகளில் கல்வி கற்ற பின், அதன் அடிப்படையில் அங்கு நம் விசாக்களை நீட்டிக்க வாய்ப்புள்ளது. அதன் வாயிலாக நம் வருவாயை அதிகரிக்கலாம்.

வெளிநாட்டு கல்விக்கு இரு முறை அட்மிஷன்கள் உள்ளன. குறைந்தபட்சம் ஐந்து வெளிநாட்டு பல்கலைகளுக்கு விண்ணப்பிக்க வேண்டும். கல்வி உதவித் தொகைக்கு பத்தாம் வகுப்பு, பிளஸ்2 வில், பெற்ற மதிப்பெண் சதவீதங்கள் கணக்கிடப்படும். இவ்வாறு, அவர் பேசினார்.

Advertisement