மத்திய கல்வி நிறுவனங்களில் உயர்கல்வி வாய்ப்பு 

கல்வியாளர் அஸ்வின் பேசியதாவது:

பத்தாம் வகுப்பு மாணவர்கள் இருப்பின், பிளஸ்1 தேர்வில் கவனமுடன் இருக்கவேண்டும். மொழிப்புலமை, தொடர்புத்திறன், அனலிடிக்கல் திறன், பிராபலம் சால்விங் திறனை மேம்படுத்திக்கொள்ளுங்கள்.

மத்திய அரசின் முதல்தர கல்விநிறுவனங்களின் நுழைவுத்தேர்வுகள் குறித்து தமிழக மாணவர்களுக்கு விழிப்புணர்வு இல்லை. பலர் விண்ணப்பிக்கவே முன்வருவதில்லை. தமிழக மாணவர்கள் தயக்கம், அச்சம் இன்றி, அனைத்து மத்திய அரசு கல்லுாரிகளின் நுழைவுத்தேர்வுகளிலும் பங்கேற்கவேண்டும். பல கல்லுாரிகளில் நுழைவுத்தேர்வில் பங்கேற்றாலே இடம் கிடைக்கும் சூழல் உள்ளது. எந்த மாநிலமாக இருந்தாலும், தயங்காமல் வாய்ப்புகள் கிடைத்தால் பெண் பிள்ளைகளை படிக்க அனுப்புங்கள். இவ்வாறு, அவர் பேசினார்.

Advertisement