அப்போலோ மகப்பேறு மருத்துவர் நாளை புதுச்சேரிக்கு வருகை

புதுச்சேரி, : சென்னை அப்போலோ கிரேடில் மற்றும் மகளிர் மருத்துவமனை மகப்பேறு மருத்துவர் புதுச்சேரியில் நாளை (29ம் தேதி) ஆலோசனை வழங்க உள்ளார்.

புதுச்சேரி எல்லபிள்ளைச்சாவடி, 100 அடி ரோடு, என்.டி.மஹால் எதிரில் அப்போலோ மருத்துவமனை தகவல் மையம் செயல்பட்டு வருகிறது.இந்த மையத்திற்கு சென்னை அப்போலோ கிரேடில் மற்றும் மகளிர் மருத்துவமனை மகப்பேறு மருத்துவர் சாருமதி, நாளை (29ம் தேதி) வருகை தந்து ஆலோசனை வழங்க உள்ளார்.

அடி வயிற்றில் வலி, ரத்த கசிவு, சிறுநீர் பாதையில் நோய் தொற்றுகள், கர்ப்பப்பை மற்றும் சினைப்பையில் கட்டிகள், குழந்தையின்மை, ஆபத்து நிறைந்த கர்ப்பம், மகளிர் சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்னைகள் மற்றும் லாப்ரோஸ்கோபி சிகிச்சைக்கு ஆலோசனை வழங்க உள்ளார். காலை 10:30 மணி முதல் மதியம் 3:30 மணி வரை ஆலோசனை வழங்கப்படுகிறது. முன் பதிவிற்கு 0413-4901083, 99446 63139, 82487 53248, எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Advertisement