தி.மு.க., நிர்வாகியை விமர்சித்த கவுன்சிலர் கணவர் மீது புகார்
திண்டிவனம் : தி.மு.க.,கவுன்சிலர் குறித்து சமூக வளைதளத்தில் விமர்சித்த, அதே கட்சி தி.மு.க., கவுன்சிலரின் கணவர் மீது போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
திண்டிவனம், நல்லியகோடன் நகர், ஜாய்ஸ் பொன்னயைா தெருவில் வசிப்பவர் சின்னசாமி.தி.மு.க., செயற்குழு உறுப்பினரான இவர், 33 வது வார்டு கவுன்சிலராக உள்ளார்.
இவர் வசிக்கும் இடத்திலுள்ள தரைப்பாலம் சேதமடைந்த விவரகாரம் குறித்தும், பாலத்தை விரைவில் சீரமைக்க வேண்டும் என்று நேற்று நடந்த நகர்மன்ற கூட்டத்தில்பேசினார்.
இதற்கு பாலம் அமைந்துள்ள பகுதியில் வசிக்கும் 26வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் உமாவின் கணவர் செந்தில்குமார், சமூக வளைதளத்தில் சின்னசாமியின் ஆசிரியர் பணி குறித்தும், பாலம் பிரச்னை பேசிய விவகாரம் குறித்து விமர்சனம் செய்து, சமூக வலைதளத்தில் பேசியுள்ளார்.
இதுகுறித்து சின்னசாமி நேற்று திண்டிவனம் டவுன் போலீசில் செந்தில்குமார் மீது புகார் கூறியுள்ளார். அதில், தன்னை விமர்சித்து சமூக வலைதளத்தில் பேசிய செந்தில்குமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார்.
இது தொடர்பாக திண்டிவனம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும்
-
ஜவுளிக்கழிவு மறுசுழற்சி செய்யும் முறை: திருப்பூருக்கு பிரதமர் மோடி பாராட்டு
-
ஆட்டிசம் பாதித்த சிறுவனுக்கு அடி: ஆசிரியர் கைது; பள்ளிக்கு சீல்
-
'நான் பழைய மூர்த்தி இல்லை' செல்லுார் ராஜூவுக்கு அமைச்சர் மூர்த்தி பதில்
-
நலத்திட்ட உதவி வழங்கல்
-
ரத்ததான முகாம்
-
இளையான்குடியில் தரமின்றி கட்டப்படும் நுாலக கட்டடம்