திட்டக்குடியில் கள்ள ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பு; வி.சி.க., மாவட்ட பொருளாளர் தப்பியோட்டம்

கடலூர்: திட்டக்குடி அருகே கொட்டகை அமைத்து கள்ள ரூபாய் நோட்டுக்களை அச்சடித்து வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி தப்பி ஓடிய நிலையில், அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள அதர்நத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் விடுதலைச் சிறுத்தை கட்சியின் மாவட்ட பொருளாளர் செல்வம். இவர் அந்த கிராமத்தில் தனக்கு சொந்தமான இடத்தில் கொட்டகை அமைத்து கள்ள நோட்டு அச்சடித்து வந்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர்.
போலீசார் வருவதைக் கண்ட வி.சி.க., நிர்வாகி செல்வம் உள்ளிட்ட கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியது. இதனையடுத்து, அந்த கொட்டகையில் போலீசார் சோதனை செய்தபோது, 83 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான கள்ள ரூபாய் நோட்டுகள் மற்றும் வாக்கி டாக்கி, ஏர்கன் பிஸ்டல், ஏர்கன் பிரிண்டிங் மிஷின், கவுண்டிங் மெஷின், பேப்பர் பண்டல் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
செல்வம் மற்றும் அவரது கூட்டாளிகளை போலீசார் தேடி வருகின்றனர். இதனிடையே, செல்வத்தை கட்சியில் இருந்து நீக்கம் செய்து வி.சி.க., உத்தரவிட்டுள்ளது.
வாசகர் கருத்து (44)
Bhaskaran - Chennai,இந்தியா
01 ஏப்,2025 - 13:47 Report Abuse

0
0
Reply
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
01 ஏப்,2025 - 12:35 Report Abuse

0
0
Reply
JaiRam - New York,இந்தியா
31 மார்,2025 - 23:25 Report Abuse

0
0
Reply
Nagarajan D - Coimbatore,இந்தியா
31 மார்,2025 - 23:04 Report Abuse

0
0
Reply
எவர்கிங் - ,
31 மார்,2025 - 20:47 Report Abuse

0
0
Reply
மஹா - ,
31 மார்,2025 - 19:36 Report Abuse

0
0
Reply
தாமரை மலர்கிறது - தஞ்சை,இந்தியா
31 மார்,2025 - 19:04 Report Abuse

0
0
Reply
skanda kumar - bangalore,இந்தியா
31 மார்,2025 - 19:03 Report Abuse

0
0
Reply
skanda kumar - bangalore,இந்தியா
31 மார்,2025 - 19:02 Report Abuse

0
0
Reply
skanda kumar - bangalore,இந்தியா
31 மார்,2025 - 19:01 Report Abuse

0
0
Reply
மேலும் 34 கருத்துக்கள்...
மேலும்
Advertisement
Advertisement