இந்தியா-பிரேசில் கால்பந்தாட்ட போட்டி

சென்னையில் நடைபெற்ற இந்தியா-பிரேசில் கால்பந்தாட்ட போட்டி
கால்பந்தாட்டத்தில் மறுமலர்ச்சியை ஏற்படுத்துமா?
பிரேசில் கால்பந்தாட்ட குழு என்பது உலகின் பிரபலமான மற்றும் வெற்றிகரமான கால்பந்தாட்ட அணிகளில் ஒன்றாகும்.
பிரேசில் கால்பந்தாட்ட குழு 1958,62,70,94.மற்றும் 2002 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்று உலக கோப்பையை பெற்ற அணியாகும்.
இப்படி ஐந்து முறை உலக கோப்பையை பெற்று அதிகளவில் உலக கோப்பையை பெற்ற பெருமையுடைய இந்த அணி, 2016 மற்றும் 2020 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் தங்கபதக்கங்கள் தட்டிச்சென்ற அணியுமாகும்.
உலகின் மிகப்பெரிய கால்பந்தாட்ட ஜாம்பவானக கருதப்படும் பீலே பிரேசில் அணிக்காக விளையாடியவர்.அந்த அணியின் நெய்மர் இன்றைய தலைமுறையின் முக்கிய வீரராவார்.
ரொமானாரியோ,ரொனால்டோ,ரொனால்டினியோ ஆகியோர் 2002 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற கால்பந்தாட்ட போட்டிகளில் சிறந்த வீரர்களாக விளங்கி உலகப்புகழ் பெற்றவர்களாவர்.
இவர்களது நேர்த்தியான பந்து கடத்திச் செல்லும் முறை மற்றும் கோல் அடிக்கும் லாவகத்திற்காக இவர்களது விளையாட்டை பார்க்க ரசிகர்கள் எப்போதுமே ஆர்வம் கொண்டிருப்பர்.
இவர்களது விளையாட்டை அல்ல இவர்களையே ஒருமுறை பார்க்க வாய்ப்பு கிடைக்காதா? என்று ஏங்கும் ரசிகர்களில் இந்திய ரசிகர்களும் அடங்குவர்.
இந்திய கால்பந்தாட்ட அணியைப் பொறுத்தவரை தகுதிச்சுற்றிலேயே உலகக்கோப்பைக்கான போட்டியில் இருந்து விலகிவிடுவதால், பிரேசிலுடன் விளையாடுவது என்பது நம் வீரர்களுக்கு கனவாகவே இருந்து வருகிறது.
இந்த நிலையில்தான் பிரேசில் மற்றும் இந்திய அணியின் மூத்த கால்பந்தாட்ட வீரர்களைக் கொண்ட போட்டி சென்னையில் நடைபெற்றது.
இருபது வருடத்திற்கு முன் கால்பந்தாட்ட ரசிகர்களின் நாயகனாக விளங்கிய ரொனால்டினியோ போன்ற வீரர்கள் களத்தில் இறங்கிவிளையாடினர்.
தொழில்முறை விளையாட்டை விட்டு ஒய்வு பெற்றுவிட்டு பல வருடங்களுக்கு மேலானாலும், இப்போதும் அவர்கள் தங்களது உடலை எப்படி கட்டுக்கோப்பாக வைத்திருக்கின்றனர் இந்த விளையாட்டை எந்த அளவிற்கு நேசிக்கின்றனர் இப்போதும் எப்படி நேர்தியாக விளையாடுகின்றனர் என்று பார்ப்பதற்காக போட்டி நடைபெற்ற சென்னை நேரு ஸ்டேடியம் 23 ஆயிரம் ரசிகர்களால் நிரம்பிவழிந்தது.
இரு அணி வீரர்கள் பலர் ஐம்பதைத் தொட்டிருந்தனர் சிலர் அந்த வயதைத் தாண்டியிருந்தனர் ஆகேவே ஆட்டத்தில் வேகம் இல்லாவிட்டாலும் விறுவிறுப்பு இருந்தது,பிரண்ட்லி மேட்ச் என்பதால் யாராவது தடுமாறி விழுந்தால் ஒடிப்போய் இரு அணிவீரர்களுமே துாக்கிவிட்டனர்.
பிரேசிலின் நட்சத்திர நாயகன் ரொனால்டினியோவைப் பார்த்த மகிழ்ச்சியில் ரசிகர்கள் மைதானத்தில் துள்ளிக்குதித்தனர் உற்சாகக்குரல் எழுப்பினர் அவரும் மைதானத்தின் நான்கு மூலைகளுக்கும் சென்று ரசிகர்களுக்கு பறக்கும் முத்தங்களை வாரி வழங்கினார்.
பிரேசில் அணிக்கே உண்டான பந்தைக் கடத்தும் அந்த லாவகத்தை இந்த விளையாட்டிலும் பார்க்கமுடிந்தது,பெரும்பாலும் பந்து பிரேசிலின் பக்கமே இருந்தது 2:1 என்ற ரீதியில் பிரேசில் வெற்றி பெற்றது.
இங்கு இந்த போட்டி நடத்துவதன் நோக்கமே துாங்கிக் கொண்டிருக்கும் தமிழக கால்பந்தாட்ட கிளப்புகளை துாசு தட்டி எழுப்ப வேண்டும் என்பதற்காகத்தான்.ரொனால்டினியாவின் படத்தை சுவரில் ஒட்டிவைத்துக் கொண்டால் மட்டும் நாம் ரொனால்டினியோவாக மாறிவிடமுடியாது, சிறு வயது முதலே உணவிலும் உடலிலும் அவர்கள் காட்டும் கட்டுப்பாட்டை நாமும் கடைப்பிடிக்க வேண்டும், 12 வயதிற்குள் எனக்கு இனி கால்பந்தாட்ட போட்டிதான் எதிர்காலம் என்பதை தீர்மானித்துவிடவேண்டும், அதற்கு பெற்றோரும் தயராக வேண்டும், மெஸ்சி போன்ற கால்பந்த வீரரின் சம்பளம் அந்த நாட்டின் பட்ஜெட்டிற்கு நிகரானது,ஒரு கால்பந்தாட்ட வீரனுக்கு விளையாடும் போது கால் பாதித்துவிட்டால் அவனது எதிர்காலமே போய்விடுமோ? என அஞ்சத்தேவையில்லை கால்பந்தாட்டத்தை மையாக வைத்து 250 வேலை வாய்ப்புகள் உள்ளன, இதை எல்லாம் சும்மா சொன்னால் புரியாது இப்படி ஒரு போட்டி மூலமாகச் சொன்னால்தான் புரியும் என்றனர் போட்டி அமைப்பாளர்கள்.
விதை சரியாகவே விதைக்கப்பட்டிருக்கிறது.
-எல்.முருகராஜ்
மேலும்
-
புதுக்கணக்கு துவக்கம்
-
தொண்டியில் உயர்கல்வி தொடர முடியாமல் மாணவிகள் தவிப்பு
-
இளம் பெண்கள் மாயம் போலீசார் விசாரணை
-
பரமக்குடி சர்வீஸ் ரோட்டோரம் வாறுகாலில் பிளாஸ்டிக் போர்வை; கொசுத் தொல்லையால் மக்கள் அவதி
-
போலீஸ் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம்
-
அரசு பள்ளிகளில் 'மிஷன் இங்கிலிஷ்' திட்டம் ஆங்கில புலமை மேம்படுத்த பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை