சத்தீஸ்கரில் தொடரும் என்கவுன்டர்; நக்சல் தலைவி சுட்டுக்கொலை

7

ராய்ப்பூர்: சத்தீஸ்கரில் தண்டேவாடா பகுதியில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்டரில், நக்சல் தலைவி ரேணுகா என்கிற பானு சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.

சத்தீஸ்கர் மாநிலம், தண்டேவாடா பகுதியில் நக்சலைட்டுகள் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. அப்பகுதியில் பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.அப்போது பாதுகாப்பு படையினர் மற்றும் நக்சலைட்டுகள் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்தது. இதில், நக்சல் தலைவி ரேணுகா என்கிற பானு சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.


மேலும் பலர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே, இவர் குறித்து தகவல் தெரிவிப்பவருக்கு ரூ.25 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

யார் இந்த ரேணுகா என்கிற பானு?




* ரேணுகா என்கிற பானு நக்சல் ஊடக குழுவின் பொறுப்பாளராக இருந்தார்.



* இவர் தெலுங்கானாவின் வாரங்கல் மாவட்டத்தில் வசித்து வந்தார்.


* தற்போது பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்டரில் நக்சல் தலைவி ரேணுகா என்கிற பானு கொல்லப்பட்டார்.


* இவர் உயிரிழந்த இடத்தில் இருந்து துப்பாக்கி, ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டன.

* 2025ம் ஆண்டில் இதுவரை எல்லையில் நடந்த பல்வேறு என்கவுன்டரில் நக்சலைட்டுகள் 119 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தை குறிப்பிட்டு, சத்தீஸ்கர் துணை முதல்வர் அருண் சாவ், ஆயுதமேந்திய நக்சலிசத்தை ஒழிப்பதற்கான அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார்.




மேலும் அவர் கூறியதாவது: நமது பாதுகாப்புப் படையினர் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். நமது பாதுகாப்புப் படையினர் துணிச்சல் உடன் செயல்படுவதால், குறிப்பிட்ட நேரத்தில் நக்சலிசத்தை ஒழிப்போம், என்றார்.

Advertisement