நெய்வேலி அனல் மின் நிலையம் முற்றுகை: விவசாயிகள் 400 பேர் கைது

கடலுார்:கர்நாடகாவிற்கு மின்சாரம் வழங்கக் கூடாது என நெய்வேலி என்எல்சி நிறுவனத்தின் அனல் மின் நிலையத்தை முற்றுகையிட்ட 400க்கும் மேற்பட்ட விவசாயிகள் கைது.
கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்எல்சி இந்தியா லிமிடெட் நிறுவனம் திறந்தவெளி சுரங்கங்கள் மூலம் நிலக்கரி வெட்டி எடுத்து அனல் மின் நிலையங்களின் மூலம் மின்சாரம் தயாரித்து தமிழகம் கர்நாடகா ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு வழங்கி வருகிறது. இதனிடையே கர்நாடகா அரசு மேக்கேதாட்டில் காவிரியின் குறுக்கே அணை கட்டுவதற்கு 9 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து அணை கட்ட முயற்சி செய்வதாகவும் இதன் மூலம் தமிழக விவசாயிகளின் உரிமை பறிக்கப்படுகிறது என்று கூறி தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் 400க்கும் மேற்பட்ட விவசாயிகள் நெய்வேலி பகுதியில் உள்ள என் எஸ் சி இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் இரண்டாவது அனல் மின் நிலையம் முன்பு தமிழக விவசாயிகளின் உரிமையை பறிக்கும் கர்நாடகாவிற்கு மின்சாரம் வழங்கக் கூடாது என்று கோரிக்கை வைத்து ஆர்ப்பாட்டம் செய்தனர் அப்பொழுது என்எல்சி நிறுவனத்தின் இரண்டாவது அனல் மின் நிலையத்திற்கு பூட்டு போட முயன்றனர் இதனால் 400க்கும் மேற்பட்ட விவசாயிகளை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்தனர் இதனால் பகுதியில் பெரும் பதற்றம் நிலை வருகிறது.
மேலும்
-
மூன்று முறை எம்.எல்.ஏ.,வாக இருந்தால் 'சீட்' மறுக்க தி.மு.க., தலைமை முடிவு
-
கூடலுார் நகராட்சியில் ஆக்கிரமிப்பு அகற்றுவது எப்போது; சுருங்கிய தெருக்களால் வாகன ஓட்டிகள் அவதி
-
கம்பம் மருத்துவமனையில் சித்தா டாக்டர் இன்றி சிரமம்
-
பெண் தற்கொலை
-
ரெகுலர் தாசில்தாராக வாய்ப்பே கிடைக்காதா 10 ஆண்டுகளாக பணி செய்தவர்கள் புலம்பல்
-
விவசாய தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்