வணிகவியல் தேசிய கருத்தரங்கம்

திண்டிவனம்: திண்டிவனம் கோனேரிக்குப்பம் சரஸ்வதி கலை கல்லுாரியில், வணிகவியல் துறை சார்பில் தேசிய கருத்தரங்கம் நடந்தது.

கல்லுாரி முதல்வர் வீரமுத்து தலைமை தாங்கினார். வணிகவியல் துறை உதவி பேராசிரியர் ராகினி வரவேற்றார்.

நிர்வாக அலுவலர் சிவா, பெற்றோர் ஆசிரியர் கழக ஒருங்கிணைப்பாளர் தண்டபாணி வாழ்த்தி பேசினர்.

பவ்டா கலை மற்றும் அறிவியல் கல்லுாரி இணை பேராசிரியர் கணேஷ்குமார், 'தொழில் முனைவோரின் பசுமை சந்தைப்படுத்துதல் தொழில்நுட்பங்களின் புதிய பரிமாணம்' குறித்து பேசினார்.

பேராசிரியர்கள், ஆய்வு மாணவர்கள் பங்கேற்றனர். சிறந்த கட்டுரையாளர்களுக்கு சான்றிதழ், புத்தகங்கள் வழங்கப் பட்டது.

வணிகவியல் துறை உதவி பேராசிரியர் தாஜூன்னிசா நன்றி கூறினார்.

Advertisement