புறக்கணிப்பு: சிங்கம்புணரியை அரசு பஸ் டெப்போக்கள் குறித்த நேரத்துக்கு வராத பஸ்களால் அவதி

மாவட்டத்தில் முக்கிய தொழில் வர்த்தக நகரான சிங்கம்புணரியில் இருந்து சுற்றுவட்டார நகரங்களுக்கு செல்ல தினமும் 5000 க்கும் மேற்பட்ட மக்கள் அரசு, தனியார் பேருந்துகளை பயன்படுத்தி வருகின்றனர். சிங்கம்புணரி வழியாக திருப்புத்துார், பொன்னமராவதி, நத்தம், மேலுார், மதுரை, துவரங்குறிச்சி ஆகிய டெப்போக்களில் இருந்து பஸ்கள் இயக்கப்படுகின்றன.
சில வருடங்களாக இந்த டெப்போக்கில் இருந்து இயக்கப்படும் பேருந்துகளை முறையாக இயக்காமல் சிங்கம்புணரியை புறக்கணிப்பதாக பயணிகள் புகார் தெரிவிக்கின்றனர்.
மதுரையில் இருந்து பொன்னமராவதிக்கு இயக்கப்படும் 2 பேருந்துகளில் ஒன்று அடிக்கடி வருவதில்லை.
அதை நம்பி காத்திருக்கும் பயணிகள் ஏமாற்றத்துடன் வேறு வாகனங்களில் செல்ல வேண்டியுள்ளது.
அதேபோல் திருப்புத்துார் டெப்போவில் இருந்து இயக்கப்படும் பஸ்களை சில நேரங்களில் வெளியூர் விசேஷங்களுக்கு சிறப்பு பேருந்துகளாக வழித்தடம் மாற்றி அனுப்பி விடுகின்றனர்.
நத்தம் டெப்போவில் இருந்து பள்ளி மாணவர்களுக்காக இயக்கப்பட்ட டவுன் பஸ்கள் காலை மாலை நேரங்களில் குறித்த நேரத்திற்கு வருவதில்லை.
பகலில் வேறு ஊருக்கு வழித்தடம் மாற்றி அனுப்பிவிட்டு இரவு நேரத்தில் மட்டும் 3 பேருந்துகளும் ஒரே நேரத்தில் சிங்கம்புணரிக்கு வருகின்றன.
தனியார் பேருந்துகள் செல்லும்வரை முகப்பு விளக்குகளை அணைத்து விட்டு, அப்பேருந்துகள் சென்றபிறகு தாமதமாக புறப்பட்டு செல்கின்றன. பொன்னமராவதி டிப்போவில் இருந்து இயக்கப்படும் பேருந்தும் குறித்த நேரத்திற்கு முன்பாகவே புறப்பட்டு செல்வதால் பயணிகள் தவிக்கின்றனர்.
சிங்கம்புணரியில் இருந்து மதுரை, காரைக்குடி, சிவகங்கை மட்டுமின்றி தொலைதுார நகரங்களுக்கு நேரடியாக பஸ் வசதி இல்லை. மற்றொரு ஊரில் இருந்து பஸ்கள் இயக்கப்படுவதால் சிங்கம்புணரியில் ஏறும் பயணிகள் உட்கார இடம் கிடைக்காமல் தவிக்கின்றனர்.
இதனால் பலர் மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டிக்கு டூவீலரில் சென்று அங்கிருந்து மற்ற ஊர்களுக்கு பஸ்களில் பயணம் செய்கின்றனர்.
சம்பந்தப்பட்ட டெப்போ மேலாளர்களிடம் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. சிங்கம்புணரியில் பஸ் டெப்போ அமைத்தால் மட்டுமே அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு ஏற்படும் என்கிறார்கள் மக்கள்.
மேலும்
-
பிரீமியர் லீக் கிரிக்கெட்: குஜராத் அணி 8 விக்., வித்தியாசத்தில் வெற்றி
-
குத்துச்சண்டை: அரையிறுதியில் ஜடுமானி
-
திக்வேஷ் ரதிக்கு அபராதம்
-
வில்வித்தை நட்சத்திரங்களுக்கு சிக்கல் * விசா கிடைப்பதில் இழுபறி
-
மீட்பு பணிகளுக்கு உதவ தற்காலிக போர் நிறுத்தம்: மியான்மர் ராணுவ அரசு அறிவிப்பு
-
ரேபிடோ உள்ளிட்ட பைக் டாக்ஸிகளுக்கு தடை; கர்நாடகா ஐகோர்ட் அதிரடி