வில்வித்தை நட்சத்திரங்களுக்கு சிக்கல் * விசா கிடைப்பதில் இழுபறி

புதுடில்லி: அமெரிக்க விசா கிடைக்காமல் இந்திய வில்வித்தை நட்சத்திரங்கள் அவதிப்படுகின்றனர்.
அமெரிக்காவில் உலக கோப்பை வில்வித்தை (ஸ்டேஜ் 1) தொடர் ஏப். 8-13ல் நடக்க உள்ளது. இதில் இந்தியா சார்பில் உலக சாம்பியன் ஆதித்தி, அன்ஷிகா குமாரி, மதுரா, சிக்கிதா, உதய் கம்போஜ், திராஜ் பொம்மரதேவா என 6 வீரர், வீராங்கனைகள், பயிற்சியாளர்கள் என 12 பேர் அமெரிக்கா செல்ல உள்ளனர்.
ஆனால் இதற்கான விசா இன்னும் கிடைக்கவில்லை. இந்திய வில்வித்தை சங்க தலைவர் குன்சன் அப்ரோல் கூறுகையில்,'' கடந்த 40 நாளுக்கு முன் விசா கேட்டு விண்ணப்பித்தோம். உரிய நேரத்தில் கிடைத்துவிடும் என்றனர். பின் 'சிஸ்டம்' பிரச்னையாக உள்ளது, ஓரிரு நாளில் சரியாகும் என்றனர். ஆனால் கடந்த 15 முதல் 20 நாளாக இதே பிரச்னை தொடர்கிறது. இதுகுறித்து இந்திய அரசு, இந்திய விளையாட்டு ஆணையத்தில் முறையிட்டும், சிக்கல் தீரவில்லை,'' என்றார்.
இந்திய வீரர் திராஜ் கூறுகையில்,'' விசா கிடைக்காததால், தொடரில் பங்கேற்க முடியாமல் போகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தரவரிசையில் புள்ளிகளை இழக்க நேரிடும். இது ஏமாற்றமாக உள்ளது,'' என்றார்.
மேலும்
-
25 ஆயிரம் ஆசிரியர்கள் பணி நீக்க தீர்ப்பை ஏற்க மாட்டேன்; ஆனால் அதனை செயல்படுத்துவோம்: சொல்கிறார் மம்தா
-
பீஹார், மேற்குவங்கம், தமிழகத்திற்கு அமித் ஷா பயணம்
-
பிரிமீயர் லீக் கிரிக்கெட்: கோல்கட்டா அணி - 104 / 3
-
வளர்ச்சியை நம்புகிறோம்: எல்லை விரிவாக்கத்தை அல்ல: பிரதமர் மோடி
-
மீனவர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு கச்சத்தீவு மீட்பு மட்டுமே: முதல்வர் ஸ்டாலின்
-
வக்பு மசோதாவுக்கு நடிகர் விஜய் எதிர்ப்பு