ரேபிடோ உள்ளிட்ட பைக் டாக்ஸிகளுக்கு தடை; கர்நாடகா ஐகோர்ட் அதிரடி

பெங்களூரு: ரேபிடோ, ஓலா உள்ளிட்ட பைக் டாக்ஸிகளுக்கு தடை விதித்து கர்நாடகா ஐகோர்ட் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. இன்னும் 6 வாரங்களுக்குள் இந்த சேவையை முற்றிலுமாக நிறுத்தவும் கெடு விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2022ம் ஆண்டு பைக்குகளை பொது போக்குவரத்து வாகனங்களாக அங்கீகரிக்கமாறு உபர் இந்தியா உள்பட பல்வேறு பைக் டாக்ஸி நிறுவனங்கள் கர்நாடகா ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தன. இந்த மனுக்கள் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, பைக் டாக்ஸிக்கான உரிய சட்டங்கள் வரும் வரையில், பைக்குகளை பொது போக்குவரத்து வாகனங்களாக்க அனுமதி வழங்குமாறு போக்குவரத்து துறைக்கு உத்தரவிட முடியாது என்று நீதிபதி பி.எம்., ஷியாம் பிரசாத் அடங்கிய அமர்வு உத்தரவிட்டது.
மேலும், கர்நாடகா அரசு மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் தகுந்த விதிகளையும், வழிகாட்டுதல்களையும் இயற்றும் வரையில், பைக் டாக்ஸி சேவைகள் நிறுத்தப்பட வேண்டும் என்று உத்தரவிட்ட கோர்ட்,, 6 வாரங்களுக்குள் கர்நாடகாவில் பைக் டாக்ஸி சேவைகளை நிறுத்தப்பட வேண்டும் ஆணை பிறப்பித்தது. மேலும், இந்த மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டது.

மேலும்
-
பீஹார், மேற்குவங்கம், தமிழகத்திற்கு அமித் ஷா பயணம்
-
பிரிமீயர் லீக் கிரிக்கெட்: கோல்கட்டா அணி பேட்டிங்
-
வளர்ச்சியை நம்புகிறோம்: எல்லை விரிவாக்கத்தை அல்ல: பிரதமர் மோடி
-
மீனவர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு கச்சத்தீவு மீட்பு மட்டுமே: முதல்வர் ஸ்டாலின்
-
வக்பு மசோதாவுக்கு நடிகர் விஜய் எதிர்ப்பு
-
நாட்டின் நலனுக்காகவே வக்ப் வாரிய சட்டத்திருத்த மசோதா: ராஜ்யசபாவில் நட்டா பேச்சு