சோலார் நிறுவனத்தை எதிர்க்கும் மக்கள் மனு

அரூர்: செட்ரப்பட்டியில், சோலார் நிறுவனங்கள் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள கிராம மக்கள், முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என, தர்மபுரி கலெக்டர் சதீஸிடம் மனு அளித்துள்-ளனர்.


அதில் கூறியுள்ளதாவது: மொரப்பூர் அடுத்த செட்ரப்பட்டியில், மூன்று தனியார் நிறுவனங்கள், 40 ஏக்கரில் சோலார் மின் நிலையம் அமைத்துள்ளன. இவை விரைவில் செயல்பாட்டுக்கு வரவுள்ள நிலையில், இதனால் விளை நிலங்கள் பாதிக்கப்படும் என, விவசாயிகளிடையே அச்சம் நிலவுகிறது. எனவே, சோலார் நிறுவனம் அமைக்க அனுமதி வழங்கிய அதிகாரிகள், சோலார் நிர்-வாகத்தினர் மற்றும் சோலார் அமைக்கப்படுவதால் பாதிக்கப்-படும் விவசாயிகள் ஆகியோர் அடங்கிய முத்தரப்பு பேச்சு-வார்த்தை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Advertisement