10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 397 மாணவர்கள் 'ஆப்சென்ட்'

தர்மபுரி:
தமிழகம் முழுவதும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. தர்மபுரி மாவட்டத்தில், 94 தேர்வு மையங்களில், 225 அரசு பள்ளிகள், 5 அரசு உதவி பெறும் பள்ளிகள், 88 தனியார் பள்ளிகள் என, 318 பள்ளிகளை சேர்ந்த, 9,610 மாணவியர், 10,426 மாணவர்கள் என, 20,036 பேர், 10ம் வகுப்பு பொதுத்-தேர்வை எழுத இருந்தனர். இதில், 264 மாணவர்கள், 133 மாண-வியர் என, 397 பேர் ஆப்சென்ட் ஆகினர்.


தர்மபுரி சி.இ.ஓ., ஜோதிசந்திரா மேற்பார்வையில் அடங்கிய, 140 பறக்கும் படையினர், 20,250 ஆசிரியர்கள் தேர்வு பணியில் ஈடு-பட்டனர். அதியமான்கோட்டை, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்-ளியில் நடந்த தேர்வு மையத்தை, கலெக்டர் சதீஸ் பார்வை-யிட்டார்.

Advertisement