சிறுமிக்கு பாலியல் தொல்லை கூலி தொழிலாளி கைது

மாரண்டஹள்ளி: தர்மபுரி மாவட்டம், மாரண்டஹள்ளி அருகே உள்ள கிராமத்தில் வசித்து வரும் கூலி தொழிலாளியின், 17 வயது மகள் பிளஸ் 2 தேர்வு எழுதி உள்ளார். நேற்று முன்தினம், கால்நடைகளை கவனிக்க அதே பகுதியில் உள்ள நிலத்திற்கு சென்றார்.
அப்போது, பெல்லுஹள்ளியை சேர்ந்த கூலி தொழிலாளி சக்-திவேல், 27, சிறுமியை பின்தொடர்ந்து சென்று, பாலியல் சீண்-டலில் ஈடுபட்டுள்ளார்.



இதில், அச்சமடைந்த அவர் பெற்றோரிடம் கூறியுள்ளார். சிறு-மியின் தாய், பாலக்கோடு அனைத்து மகளிர் போலீசில் அளித்த புகார்படி, இன்ஸ்பெக்டர் வீரம்மாள் நேற்று கூலி தொழிலாளி சக்திவேலை கைது செய்து, தர்மபுரி மாவட்ட சிறையில் அடைத்-தனர்.

Advertisement