கார் விலையை உயர்த்தக்கூடாது: நிறுவனங்களுக்கு டிரம்ப் எச்சரிக்கை

வாஷிங்டன்: வெளிநாடுகளில் இருந்து கார்கள் இறக்குமதி மீது 25 சதவீத வரி விதித்துள்ள காரணத்தால், உள்நாட்டில் கார்கள் விலையை உயர்த்தக்கூடாது என, அமெரிக்க கார் நிறுவனங்களை அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார்.
கனடா, இந்தியா, சீனா, ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்டவற்றிலிருந்து, அமெரிக்கா இறக்குமதி செய்யும் கார்களுக்கு 25 சதவீத வரியை டிரம்ப் விதித்துள்ளார். வரும் 3ம் தேதி இது அமலுக்கு வர உள்ளது. இறக்குமதி செலவு அதிகரிப்பு காரணமாக, வெளிநாட்டு கார்களை அமெரிக்காவில் இறக்குமதி செய்து விற்கும் நிறுவனங்கள், அந்த தொகைக்கு ஏற்ப கார்கள் விலையை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், உள்நாட்டு விற்பனை விலையை கார் நிறுவனங்கள் உயர்த்தக்கூடாது என அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார். அமெரிக்க பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தும் தன் நடவடிக்கைக்கு, உள்நாட்டு நிறுவனங்கள் ஒத்துழைக்க வேண்டுமென அவர் கூறினார்.
நீண்ட கால அடிப்படையில், அமெரிக்க கார் நிறுவனங்களுக்கு இறக்குமதி வரி உயர்வால் பலன் கிடைக்கும் என்றும்; உள்நாட்டு உற்பத்தியும், விற்பனையும் உயரும் என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.




மேலும்
-
மதுரையில் போலீஸ் என்கவுன்டர்; பிரபல ரவுடி போலீசாரால் சுட்டுக்கொலை
-
மோசமான நடத்தை: பிரிட்டன் பிரைமார்க் நிறுவன தலைமை நிர்வாகி பால் மர்ச்சண்ட் ராஜினாமா
-
வக்பு சட்ட திருத்தத்தை எம்.பி.,க்கள் ஆதரிக்கணும்: பிஷப் கூட்டமைப்பு வேண்டுகோள்
-
பிரதமர் மோடியின் தனிச் செயலாளராக ஐ.ப்.எஸ் அதிகாரி நிதி திவாரி நியமனம்: யார் இவர் தெரியுமா?
-
எம்புரான் படத்தில் முல்லைப்பெரியாறு அணை பற்றி சர்ச்சை கருத்து; தடை விதிக்க விவசாயிகள் வலியுறுத்தல்
-
போதை பொருள் வர்த்தகத்திற்கு எதிரான அரசின் இடைவிடாத வேட்டை தொடரும்; உள்துறை அமைச்சர் அமித் ஷா