மாற்றுத்திறனாளி பெண்ணை கற்பழிக்க முயன்றவருக்கு எட்டரை ஆண்டு சிறை

ஈரோடு: ஈரோடு மாவட்டம் அந்தியூர் ஊமாரெட்டியூர், மூனாஞ்சாவடியை சேர்ந்தவர் தனபால், 42; லாரி டிரைவர்.
கடந்த, 2020 ஆக.,2ல் ஆடு மேய்த்து கொண்டிருந்த, திருமணமாகி கணவரை பிரிந்த மாற்றுத்திறனாளி பெண்ணை தாக்கி, பலாத்காரம் செய்ய முயன்றார். அப்பெண் காது கேட்காத, வாய் பேச முடியாதவர். அவருக்கு கொலை மிரட்டலும் விடுத்துள்ளார்.

இதுபற்றிய புகாரின் பேரில், பவானி அனைத்து மகளிர் போலீசார் விசாரித்து, மூன்று பிரிவுகளில் வழக்குப்பதிந்து தனபாலை கைது செய்தனர். இந்த வழக்கு ஈரோடு மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடந்தது. இதில் நீதிபதி முருகேசன் நேற்று தீர்ப்பளித்தார்.
பலாத்கார முயற்சிக்காக, 5 ஆண்டு சிறை, தாக்கியதற்காக, 3 ஆண்டு சிறை, காயம் ஏற்படுத்தியதற்காக, 6 மாத சிறை என, எட்டரை ஆண்டு சிறை தண்டனை, 2,500 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். இவ்வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் பூங்கோதை ஆஜாரானார்.

Advertisement