சம்பளப் பணம் விடுவிக்காதது ஏன்: மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் கேள்வி

சென்னை: 'ஏழைகளின் சம்பளப் பணத்தை விடுவிக்க மட்டும் ஏன் பணமில்லை?' என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
காந்தியைப் பிடிக்காதவர்களுக்கு அவர் பெயரிலான நூறு நாள் வேலைத் திட்டத்தையும் பிடிக்கவில்லை. இந்தியக் கிராமப்புறப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக, ரத்த ஓட்டமாக யு.பி.ஏ., அரசால் வளர்த்தெடுக்கப்பட்ட மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உத்தரவாதத் திட்டம் மீது சம்மட்டி கொண்டு அடித்து ஒரேயடியாக ஒழித்துக்கட்டும் வேலையில் இறங்கி இருக்கிறது. இரக்கமற்ற பா.ஜ., அரசு.
உங்களுக்கு வேண்டப்பட்ட கார்ப்பரேட்டுகள் என்றால் பல லட்சம் கோடி ரூபாய்க் கடனைக் கூட ஒரே கையெழுத்தில் தள்ளுபடி செய்கிறீர்களே? வேகாத வெயிலில் உடலை வருத்தி, வியர்வை சிந்தி உழைத்த ஏழைகளின் சம்பளப் பணத்தை விடுவிக்க மட்டும் ஏன் பணமில்லை? பணமில்லையா அல்லது மனமில்லையா?
தமிழகம் எங்கும் இன்றைய ஆர்ப்பாட்டத்தில் கட்சியினரும், ஏழை மக்களும் எழுப்பும் குரல் டில்லியை எட்டட்டும்! அரசின் மனம் இரங்கட்டும்! இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.












மேலும்
-
பிரியாணி, சவர்மா சாப்பிட்டவர்களுக்கு வாந்தி, பேதி; பிலால் ஹோட்டலுக்கு சீல்
-
அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் அ.தி.மு.க., எம்.பி., தம்பிதுரை சந்திப்பு
-
வெப்ப அலை எதிரொலி; கர்நாடகாவில் அரசு அலுவலக நேரத்தில் மாற்றம்
-
தேனீக்கள் கொட்டியதில் கேரள சுற்றுலாப் பயணி பலி
-
வெம்பக்கோட்டை அகழாய்வில் தங்கத்தில் செய்த மணி கண்டெடுப்பு!
-
பாலியல் குறித்து ஆபாச கருத்து:இன்ஸ்டாகிராமில் அனைத்து பதிவுகளையும் நீக்கிய யூடியூபர் அபூர்வா மகிஜா