வனத்தில் புற்களுக்கு தீ வைத்தவர் கைது
அந்தியூர்: பர்கூர்மலையில், தட்டகரை வனப்பகுதியில், கர்கேகண்டி கிழக்கு பீட், பசுவேஸ்வரன் கோவில் வனப் பகுதியில், நேற்று மதியம் தட்டகரை ரேஞ்சர் ராமலிங்கம் தலைமையிலான வனத்துறையினர் ரோந்தில் ஈடுபட்டனர்.
அப்பகுதியில் வனத்தில் காய்ந்திருந்த புற்களுக்கு ஒருவர் தீ வைத்துக் கொண்டிருந்தார். அவரை பிடித்து விசாரித்ததில், பர்கூர் வேலாம்பட்டியை சேர்ந்த மாதேவன், 38, என்பது தெரிந்தது. காய்ந்த புல்லில் தீ வைத்தால், மீண்டும் புல் முளைக்கும் என்பதற்காக தீ வைத்ததாக கூறியுள்ளார். அவரை கைது செய்த வனத்துறையினர், பவானி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
திணறிய கோல்கட்டா : மும்பை அணிக்கு 117 ரன்கள் இலக்கு
-
மவுனம் அனைத்தும் நன்மைக்கே: டில்லி பயணம் குறித்த கேள்விக்கு செங்கோட்டையன் பதில்!
-
மதுரையில் போலீஸ் என்கவுன்டர்; பிரபல ரவுடி போலீசாரால் சுட்டுக்கொலை
-
மோசமான நடத்தை: பிரிட்டன் பிரைமார்க் நிறுவன தலைமை நிர்வாகி பால் மர்ச்சண்ட் ராஜினாமா
-
வக்பு சட்ட திருத்தத்தை எம்.பி.,க்கள் ஆதரிக்கணும்: பிஷப் கூட்டமைப்பு வேண்டுகோள்
-
பிரதமர் மோடியின் தனிச் செயலாளராக ஐ.ப்.எஸ் அதிகாரி நிதி திவாரி நியமனம்: யார் இவர் தெரியுமா?
Advertisement
Advertisement