8 இடங்களில் இன்று தி.மு.க., ஆர்ப்பாட்டம்

ஈரோடு: ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.க., செயலாளரும், வீட்டு வசதித்துறை அமைச்சருமான முத்துசாமி வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது: தமிழகத்தில் நுாறு நாள் வேலை திட்ட பயனாளிகளுக்கு பல மாதங்களாக ஊதியம் வழங்க மறுக்கும் மத்திய பா.ஜ., அரசை கண்டித்து இன்று காலை, 10:00 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடக்க உள்ளது.

இதன்படி யூனியன் வாரியாக ஈரோடு - காளிங்கராயன்பாளையம் பழைய கால்நடை மருத்துவமனை அருகே, சென்னிமலை - வெள்ளோடு நால் ரோடு, மொடக்குறிச்சி கிழக்கு - மொடக்குறிச்சி நால்ரோடு, மொடக்குறிச்சி மேற்கு - அவல்பூந்துறை நால் ரோடு, மொடக்குறிச்சி தெற்கு - அரச்சலுார் அண்ணா நகர், கொடுமுடி தெற்கு - கொடுமுடி பஸ் ஸ்டாண்ட் அருகே, கொடுமுடி மேற்கு - அஞ்சூர் பஞ்., நல்லசெல்லிபாளையம் பஸ் நிறுத்தம் அருகே, கொடுமுடி வடக்கு - கருமாண்டம்பாளையம் நால் ரோடு என எட்டு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடக்க உள்ளது. இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Advertisement