எம்.பி.ஏ., விடைத்தாள்கள் மாயம்: கேரளா பல்கலையில் அதிர்ச்சி

திருவனந்தபுரம்: கேரள பல்கலைக்கழகத்தில் 71 எம்.பி.ஏ., மாணவர்களின் விடைத்தாள்கள் மாயமானது, மாநிலத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
காணாமல் போன விடைத்தாள்கள் 2024-மே மாதம் நடைபெற்ற இறுதி செமஸ்டர் விடைத்தாள்கள் ஆகும்.
இவை கேரள பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள ஐந்து கல்லுாரிகளை சேர்ந்த மாணவர்களின் விடைத்தாள்கள் என தெரியவந்துள்ளது.
இது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் வி டி சதீசன் கூறியதாவது:
இது உயர்கல்வித் துறையின் தவறான மேலாண்மைக்கு ஒரு எடுத்துக்காட்டு.
மூன்றாம் செமஸ்டர் தேர்வின் திட்ட நிதி பாடத்திற்கான விடைத்தாள்கள், ஆசிரியர்களிடம் மதிப்பீட்டிற்காக ஒப்படைக்கப்பட்ட பின்னர் காணாமல் போயின.
முடிவுகளை வெளியிடாமல் தாமதப்படுத்துவதன் மூலம் பல்கலைக்கழகம் பிரச்சினையை மூடிமறைக்கிறது.
தேர்வு முடிந்து 10 மாதங்கள் ஆகியும் முடிவுகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. அதற்கான காரணத்தை விளக்காமல் மறு தேர்வு அறிவிப்பை வெளியிட்டது. இச்சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளதால், பாலக்காட்டை சேர்ந்த ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க பல்கலைகழகம் முடிவுக்கு வந்துள்ளது.
மாணவர்கள் மீண்டும் தேர்வு எழுத தயாராக இல்லை. அவர்களில் பெரும்பானவர்கள் தற்போது வெளிநாடுகளில் உயர் கல்வி படித்தும், மற்றவர்கள் சான்றிதழ் இல்லாததால் வேலையிலும் சேர முடியாமல் சோகத்தில் உள்ளனர்.
மேலும்
-
போதை பழக்கத்துக்கு அடிமையானவருக்கு மனநல டாக்டரின் கண்காணிப்பு அவசியம்; அரசு வழிகாட்டுதல்கள் வெளியீடு
-
வெடித்து சிதறிய காஸ் சிலிண்டர்: 4 குழந்தைகள் உட்பட 7 பேர் பலி
-
ஐ.டி., பூங்கா அமைக்க கடும் எதிர்ப்பு; ஹைதராபாத் பல்கலை மாணவர்கள் கைது
-
தேடப்பட்ட நக்சலைட் சுட்டுக்கொலை
-
மராத்தி பேசாதவர்களின் கன்னத்தில் அறையுங்கள்; நவநிர்மாண் சேனா ராஜ் தாக்கரே ஆவேசம்
-
எம்.எஸ்.எம்.இ., வரையறை மாற்றத்தால் பலனா, பாதிப்பா? குறு நிறுவனங்களிடையே குழப்பம்