இன்று நாக்பூர் செல்கிறார் பிரதமர்; பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கிறார்

மும்பை: பல்வேறு அரசு திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக, மஹாராஷ்டிரா மாநிலம் நாக்பூருக்கு இன்று செல்லும் பிரதமர் மோடி, ஆர்.எஸ்.எஸ்., நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கிறார்.
இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்; மாதவ் நேத்ராலயா கண் நிறுவனம் மற்றும் ஆராய்ச்சி மையத்தின் புதிய கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார். இதில், 250 படுக்கைகள், 14 வெளிநோயாளி பிரிவு மற்றும் 14 நவீன ஆபரேசன் தியேட்டர்களுடன் கூடிய மருத்துவமனை கட்டடம் அமைகிறது.
தொடர்ந்து, சோலார் டிஃபென்ஸ் மற்றும் ஏரோஸ்பேஸில் 1,250 மீட்டர் நீளம், 25 மீட்டர் அகலத்தில் வான்வழி வாகனங்களுக்காக புதிதாக கட்டப்பட்ட விமான ஓடுதளத்தையும் அவர் திறந்து வைக்க உள்ளார்.
இதைத் தொடர்ந்து, ஸ்மிருதி மந்தீரில் நடக்கும் ஆர்.எஸ்.எஸ்., நிகழ்ச்சியிலும் பிரதமர் மோடி பங்கேற்க இருக்கிறார். அங்கு, ஆர்.எஸ்.எஸ்., தலைவர்கள் ஹெட்கேவார்,கோல்வால்கர் ஆகியோரின் படங்களுக்கு மரியாதை செலுத்த உள்ளார். தொடர்ந்து, தீக்ஷாபூமியில் உள்ள அம்பேத்கர் நினைவிடத்தில் மரியாதை செலுத்துகிறார்.
பிரதமர் மோடியின் இந்த வருகையையொட்டி, 5,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, மஹாராஷ்டிரா பயணத்தை முடித்துக் கொண்டு சத்தீஸ்கர் செல்லும் பிரதமர், அங்கு பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
மேலும்
-
ஐ.டி., பூங்கா அமைக்க கடும் எதிர்ப்பு; ஹைதராபாத் பல்கலை மாணவர்கள் கைது
-
தேடப்பட்ட நக்சலைட் சுட்டுக்கொலை
-
மராத்தி பேசாதவர்களின் கன்னத்தில் அறையுங்கள்; நவநிர்மாண் சேனா ராஜ் தாக்கரே ஆவேசம்
-
எம்.எஸ்.எம்.இ., வரையறை மாற்றத்தால் பலனா, பாதிப்பா? குறு நிறுவனங்களிடையே குழப்பம்
-
காட்சி பொருளான தண்ணீர் பந்தல்
-
தேசிய நெடுஞ்சாலையில் தி.மு.க., பொதுக்கூட்டம்