பிரேசில் பயிற்சியாளர் நீக்கம் * அர்ஜென்டினாவுடன் தோற்றதால்...

சாவ் பாலோ: அமெரிக்காவில் வரும் 2026ல் 'பிபா' உலக கோப்பை கால்பந்து தொடர் நடக்கவுள்ளது. இம்முறை 48 அணிகள் பங்கேற்க உள்ளன. இதற்கான தென் அமெரிக்க பிரிவு தகுதிச்சுற்று நடக்கிறது.
இதில் நடப்பு சாம்பியன் அர்ஜென்டினாவுக்கு எதிரான இரண்டு போட்டியிலும் பிரேசில் தோல்வியடைந்தது. புள்ளிப்பட்டியலில் பிரேசில் (21) ஐந்தாவது இடத்தில் உள்ளது. இதையடுத்து கடந்த 14 மாதம் பயிற்சியாளராக இருந்த டோரிவல் ஜூனியர் 62, நீக்கம் செய்யப்பட்டார்.
இவரது பயிற்சியில் பிரேசில் அணி 7 வெற்றி, 7 'டிரா' செய்து, 2ல் தோற்றது. ஆனால், கடைசி 4 போட்டியில் 1ல் தான் வென்றது. இதில் 25 கோல் அடித்தது. 17 கோல் எதிரணிக்கு விட்டுக் கொடுத்தது.
கடந்த ஆண்டு கோபா அமெரிக்க தொடரில் காலிறுதியுடன் திரும்பியது.
இதுகுறித்து பிரேசில் கால்பந்து கூட்டமைப்பு தலைவர் எட்னால்டோ ரோட்ரிக்ஸ் கூறுகையில்,'' டோரிவல் ஜூனியர் பதவிக்காலம் இனி அவ்வளவு தான். புதிய பயிற்சியாளரை தேடுகிறோம்,'' என்றார்.
தற்போது ஸ்பெயின் பயிற்சியாளராக உள்ள ஆன்செலோட்டி, அல் ஹிலால் அணியின் ஜார்ஜ் ஜீசஸ் என இருவரில் ஒருவரை தேர்வு செய்ய பேச்சுவார்த்தை நடக்கின்றன.
மேலும்
-
'தேயிலை ஏற்றுமதி அதிகரித்தாலும் இறக்குமதி கவலை அளிக்கிறது'
-
பயிர் நகை அடமான கடன் தள்ளுபடி தொகையில் ரூ.1104 கோடி கூட்டுறவு வங்கிக்கு விடுவிப்பு
-
முக்கிய நகரங்களின் வீடு வினியோகம்; மார்ச் காலாண்டில் 34 சதவீதம் சரிவு
-
மன்னவனுார் சூழல் சுற்றுலா மையம் நான்கு நாட்கள் மூடல்
-
சிமென்டிலிருந்து ஒயருக்கு மாறியது அதானி - பிர்லா குழுமங்களின் போட்டி
-
சேலம் கோட்ட ரயில்வேக்கு புதிய மேலாளர்