அரையிறுதியில் பெங்களூரு அணி * ஐ.எஸ்.எல்., கால்பந்தில்...

பெங்களூரு: ஐ.எஸ்.எல்., கால்பந்து அரையிறுதிக்கு முன்னேறியது பெங்களூரு அணி. நேற்று நடந்த 'பிளே ஆப்' போட்டியில் 5-0 என மும்பை அணியை வென்றது.
இந்தியாவில் ஐ.எஸ்.எல்., கால்பந்து 11வது சீசன் நடக்கிறது. மொத்தம் 13 அணிகள் பங்கேற்கின்றன. லீக் சுற்று முடிவில் முதல் இரு இடம் பெற்ற மோகன் பகான், கோவா அணிகள் நேரடியாக அரையிறுதிக்கு முன்னேறின. அடுத்த நான்கு இடம் பெற்ற பெங்களூரு, வடகிழக்கு யுனைடெட், ஜாம்ஷெட்பூர், மும்பை அணிகள் 'பிளே ஆப்' சுற்றுக்கு தகுதி பெற்றன.
நேற்று நடந்த 'நாக் அவுட்' போட்டியில் பெங்களூரு, மும்பை அணிகள் மோதின. போட்டி துவங்கிய 9 வது நிமிடத்தில் பெங்களூரு வீரர் சுரேஷ் சிங், இடது காலால் பந்தை உதைத்து கோல் அடித்தார். 42வது நிமிடத்தில் பெங்களூரு அணிக்கு 'பெனால்டி' வாய்ப்பு கிடைத்தது. இதை மெண்டெஸ் கோலாக மாற்றினார்.
62 நிமிடம் சுரேஷ் சிங் கொடுத்த பந்தை பெற்ற ரியான் வில்லியம்ஸ், கோல் அடித்து கைகொடுத்தார். தவிர, சுனில் செத்ரி (76), பெரேரா தியாஸ் (83) தங்கள் பங்கிற்கு ஒரு கோல் அடித்தனர். முடிவில் பெங்களூரு அணி 5-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, அரையிறுதிக்கு முன்னேறியது. இதில் கோவாவை சந்திக்க உள்ளது.
மேலும்
-
போதை பழக்கத்துக்கு அடிமையானவருக்கு மனநல டாக்டரின் கண்காணிப்பு அவசியம்; அரசு வழிகாட்டுதல்கள் வெளியீடு
-
வெடித்து சிதறிய காஸ் சிலிண்டர்: 4 குழந்தைகள் உட்பட 7 பேர் பலி
-
ஐ.டி., பூங்கா அமைக்க கடும் எதிர்ப்பு; ஹைதராபாத் பல்கலை மாணவர்கள் கைது
-
தேடப்பட்ட நக்சலைட் சுட்டுக்கொலை
-
மராத்தி பேசாதவர்களின் கன்னத்தில் அறையுங்கள்; நவநிர்மாண் சேனா ராஜ் தாக்கரே ஆவேசம்
-
எம்.எஸ்.எம்.இ., வரையறை மாற்றத்தால் பலனா, பாதிப்பா? குறு நிறுவனங்களிடையே குழப்பம்