திருவாலங்காடில் திடீர் பனி 20 நிமிடம் ரயில்கள் தாமதம்

திருவாலங்காடு:திருவாலங்காடு மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில், நேற்று காலை திடீரென அதிகளவில் பனிப்பொழிவு இருந்தது. காலை 8:00 மணி வரை மூடுபனி நிலவியது. இதன் காரணமாக, சென்னை - -அரக்கோணம் ரயில் மார்க்கத்தில் போக்குவரத்து பாதித்தது. ரயில்களின் முகப்பு விளக்கை ஒளிரவிட்டு, தண்டவாளத்தில் மெதுவாக ஊர்ந்து சென்றன.

வழக்கமாக, மார்கழி மற்றும் தை மாதங்களில் பனிப்பொழிவு அதிகளவில் இருக்கும். பின், மாசி மாதத்தில் அவ்வப்போது நிகழும் காலநிலை மாற்றத்தால், பங்குனி மாதமான நேற்று திருவாலங்காடு சுற்றுவட்டாரத்தில் பனிப்பொழிவு அதிகரித்து காணப்பட்டது.

இதனால், அரக்கோணம் ---- சென்னை மார்க்கத்தில், காலை புறப்பட வேண்டிய 20க்கும் மேற்பட்ட புறநகர் ரயில்கள் மற்றும் காவேரி, திருவனந்தபுரம், மங்களூரு, கோயம்புத்தூர் உள்ளிட்ட எக்ஸ்பிரஸ் ரயில்கள் ஊர்ந்தபடி சென்றன. புறநகர் ரயில்கள், 20 நிமிடங்கள் தாமதமாக சென்றன. இதனால், பயணியர் கடும் அவதியடைந்தனர்.

Advertisement