அ.தி.மு.க., 5 இடத்தில் நீர்மோர் பந்தல் திறப்பு


அ.தி.மு.க., 5 இடத்தில் நீர்மோர் பந்தல் திறப்பு


ஊத்தங்கரை:ஊத்தங்கரை சட்டசபை தொகுதியில், அ.தி.மு.க., சார்பில், நேற்று, ஐந்து இடங்களில் நீர்மோர் பந்தல் திறக்கப்பட்டது. எம்.எல்.ஏ., தமிழ்செல்வம் தலைமை வகித்தார். அ.தி.மு.க., துணை பொதுச்செயலாளர் முனுசாமி, நீர்மோர் பந்தலை திறந்து வைத்தார். இதேபோல், சாமல்பட்டி, காரப்பட்டு, ஊத்தங்கரை, அனுமன் தீர்த்தம், சிங்காரப்பேட்டை ஆகிய பகுதிகளில் நீர்மோர் வழங்கப்பட்டது.
இதில், கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளர் அசோக்குமார், முன்னாள் எம்.எல்.ஏ., கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட துணை செயலாளர் சாகுல்அமீது, ஒன்றிய செயலாளர்கள் வடக்கு வேடி, தெற்கு வேங்கன், மத்திய சாமிநாதன், நகர செயலாளர் ஆறுமுகம், முன்னாள் ஒன்றிய செயலாளர் தேவேந்திரன், தொகுதி செயலாளர் திருஞானம், தெற்கு ஒன்றிய துணை செயலாளர் வைரம்பட்டி முருகன், முன்னாள் பஞ்., தலைவர் ஜீவானந்தம் மற்றும் அ.தி.மு.க., நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Advertisement