மரம் விழுந்ததில் போக்குவரத்து பாதிப்பு

சேலம்: சேலம் மாவட்டம் ஏற்காட்டில் கடந்த 2 மாதங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இந்நிலையில் இன்று (ஏப்ரல் 03) அதிகாலை 6 மணி முதல் ஏற்காடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் லேசான சாரல் மழை பெய்ய தொடங்கியது.


இந்த சாரல் மழை சுமார் அரை மணி நேரம் பெய்தது. ஏற்காடு மலைப்பாதையில் உள்ள 8வது கொண்டை ஊசி வளைவு அருகில் சாலையோரத்தில் கொடிகள் படர்ந்து இருந்த பெரிய மரம் ஒன்று முறிந்து சாலையின் குறுக்கே விழுந்தது.


இதனால் சிறுது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற ஏற்காடு தீயணைப்பு மற்றும் நெடுஞ்சாலை துறையினர் சாலையின் குறுக்கே இருந்த மரத்தை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். பின்னர் மலை பாதையில் போக்குவரத்து சரி செய்யப்பட்டது.

Advertisement