தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வு; ஒரு சவரன் ரூ.68,480!

சென்னை: சென்னையில் இன்று (ஏப்ரல் 03) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ரூ.400 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.68,480க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ஒரு கிராம் ரூ.8,560க்கு விற்பனை ஆகிறது.
சர்வதேச நிலவரங்களால் பாதுகாப்பு கருதி, பெரிய முதலீட்டாளர்கள் தங்கத்தில் அதிகளவில் முதலீடு செய்து வருகின்றனர். இதனால், சர்வதேச சந்தையில் தங்கம் விலை அதிகரித்துள்ளதால், நம் நாட்டிலும் அதன் விலை எப்போதும் இல்லாத வகையில் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
தமிழகத்தில் கடந்த திங்கள் கிழமை (மார்ச் 31) காலை, 22 காரட் ஆபரண தங்கம் கிராம், 8,425 ரூபாய்க்கும், சவரன், 67,400 ரூபாய்க்கும் விற்பனையானது. மாலையில் கிராம், 8,450 ரூபாய்க்கும், சவரன், 67,600 ரூபாய்க்கும் விற்கப்பட்டது. நேற்று முன்தினம் (ஏப்ரல் 01) தங்கம் விலை கிராமுக்கு, 60 ரூபாய் உயர்ந்து, 8,510 ரூபாய்க்கு விற்கப்பட்டது. சவரனுக்கு, 480 ரூபாய் அதிகரித்து, எப்போதும் இல்லாத வகையில், 68,080 ரூபாய்க்கு விற்பனையானது.
நேற்று (ஏப்ரல் 02) தங்கம் விலையில் மாற்றமில்லை. இந்நிலையில் இன்று (ஏப்ரல் 03) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ரூ.400 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.68,480க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ஒரு கிராம் ரூ.8,560க்கு விற்பனை ஆகிறது. தங்கம் விலை புதிய உச்சமாக ஒரு சவரன் ரூ.67 ஆயிரத்தை தாண்டியது.

மேலும்
-
பிளஸ் டூ மாணவிக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை: 23 பேர் மீது வழக்கு
-
சமையல் காஸ் விலை உயர்வை வாபஸ் பெற வேண்டும்: முதல்வர் வலியுறுத்தல்
-
அமைச்சர்கள் வழக்கு: தொடர்கிறது நீதிபதிகள் விலகல்!
-
கச்சத்தீவு விவகாரத்தில் சட்டசபையில் முதல்வர் தவறான தகவல்கள்: அண்ணாமலை குற்றச்சாட்டு
-
நான் உயிருடன் இருக்கும் வரை நடக்காது: பணி நீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு மம்தா ஆறுதல்
-
சத்தீஸ்கரில் பாதுகாப்பு படையினரிடம் நக்சல்கள் 26 பேர் சரண்!