சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்கதேசத்தினர் 8 பேர் கைது

கடலூர்: புவனகிரியில் உரிய ஆவணங்கள் இன்றி தங்கி இருந்த, வங்கதேசத்தினர் 8 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கடலூர் மாவட்டம், புவனகிரி அருகே வண்டுராயன்பட்டு கிராமத்த்தில் உள்ள அரசு விதைப்பண்ணையில் புதிய கட்டடம் கட்டுமானப் பணி நடந்து வருகிறது. இந்த கட்டுமான பணியில் ஈடுபட்டு வந்த 8 பேர் மீது சந்தேகம் இருப்பதாக புவனகிரி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி, 8 பேரிடம் புவனகிரி போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த, முகமதுமிராட்அலி(32), முகமது அப்துல்லா(28), முகமதுஆரிப்கோசன் (29), முகமதுமினருல்ஹக்(18), முகமதுஷகில்அலி(20), முகமது ரோம்சன்அலி (20), முகமதுமிராசுல் இஸ்லாம்(26) மற்றும் அவல்ஷேக்(22) ஆகிய 8 பேர் போலி ஆதார் கார்டு பெற்று, பெற்று, உரிய ஆவணங்கள் இன்றி தங்கி இருந்து கட்டட வேலை செய்து வந்தது தெரியவந்தது.
8 பேரையும் கைது செய்த போலீசார் அவர்கள் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, சிறையில் அடைத்தனர்.










மேலும்
-
25,753 ஆசிரியர்கள் நியமனம் செல்லாது: மேற்கு வங்க அரசுக்கு விழுந்தது இடி
-
திருபுவனையில் புதிய மின்மாற்றி எம்.எல்.ஏ., இயக்கி வைப்பு
-
அபாண்டமாக குற்றஞ்சாட்டுவதா? அனுராக் மீது கார்கே பாய்ச்சல்
-
'பார்க்கிங்'ல் இயங்கிய அமுதசுரபி ஒயின்ஸ் கோர்ட் உத்தரவால் அதிரடி அகற்றம்
-
அரசு துறை சேவைகளின் எண்ணிக்கை 176 ஆக அதிகரிப்பு: கூடுதலாக 171 திட்ட விண்ணப்பங்கள் சேர்ப்பு
-
பீஹார் பெண் பலாத்காரம்; பெங்களூரில் இருவர் கைது