தண்ணீரை போற்றி பாதுகாக்க வேண்டும்தர்மபுரி கலெக்டர் சதீஸ் பேச்சு
தண்ணீரை போற்றி பாதுகாக்க வேண்டும்தர்மபுரி கலெக்டர் சதீஸ் பேச்சு
அதியமான்கோட்டை:அதியமான்கோட்டையில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு, கிராம சபை கூட்டம் நேற்று நடந்தது. இதில், பங்கேற்ற கலெக்டர் சதீஸ் பேசியதாவது:
தர்மபுரி மாவட்டத்தில் மொத்தம் உள்ள, 251 பஞ்.,களில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு, சிறப்பு கிராம சபைக்கூட்டம் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தண்ணீர் விலை மதிப்பில்லா ஒரு பொருளாகும். நீடித்து நிலைத்து பல ஆண்டுகளுக்கு பயன்படுத்திடும் வகையில் தண்ணீரை போற்றி பாதுகாக்க வேண்டும். மழைநீரை
சேகரித்தல், சிக்கனமாக தண்ணீரை பயன்படுத்துதல், மறு சுழற்சிக்கு உட்படுத்துதல், நிலத்தடி நீரை செறிவூட்டுதல், நீர் மாசுபாட்டைத் தடுத்தல், மரம் வளர்த்தலை ஊக்குவித்தல், ஏரி, குளம், கால்வாய்களை தூர்வாரி புனரமைத்தல், நீரின் முக்கியத்துவத்தை பொதுமக்களிடம் எடுத்து கூறுதல், உள்ளிட்ட பணிகளை கடைபிடித்து, பொதுமக்கள் அனைவரும் நீரின் இன்றியமையாமை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும். அனைத்து வீடுகளிலும் திடக்
கழிவுகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து வழங்குவதை உறுதி செய்திட வேண்டும். இவ்வாறு பேசினார்.
தர்மபுரி, தி.மு.க., - எம்.பி., மணி, தர்மபுரி பா.ம.க., - எம்.எல்.ஏ., வெங்கடேஸ்வரன், மண்டல உதவி திட்ட அலுவலர் உமா, உதவி இயக்குனர் (பஞ்.,) நிர்மல் ரவிக்குமார், ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட செயற்பொறியாளர் சிவக்குமார், நல்லம்பள்ளி தாசில்தார் சிவக்குமார், பி.டி.ஓ.,க்கள் கலைவாணி, இளங்குமரன் உட்பட பலர் பங்கேற்றனர்.
மேலும்
-
மருதமலை கோவிலில் வெள்ளி வேல் திருட்டு; வெளியானது சி.சி.டி.வி., காட்சி
-
சமைக்காத கோழிக்கறி சாப்பிட கொடுத்த பெற்றோர்: 2 வயது குழந்தை உயிரிழப்பு
-
கிராம சுகாதார செவிலியர் பணி விவகாரம்; அரசுக்கு சீமான் கடும் கண்டனம்
-
8 வயதில் காணாமல் போன சிறுவன்; 14 ஆண்டுக்குப் பிறகு குடும்பத்துடன் இணைந்ததில் நெகிழ்ச்சி
-
வக்ப் சட்டத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடருவோம்; முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வு; ஒரு சவரன் ரூ.68,480!