வெள்ளகோவிலில் தி.மு.க., ஆர்ப்பாட்டம்
வெள்ளகோவிலில் தி.மு.க., ஆர்ப்பாட்டம்
வெள்ளகோவில்:திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில் ஒன்றியத்துக்கு உட்பட்ட தாசவ நாயக்கன்பட்டியில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய ரூ.4,034 கோடியை வழங்காமல் உள்ள மத்திய அரசை கண்டித்து செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட துணை செயலாளர் முத்துக்குமார், ஒன்றிய நிர்வாகிகள், கூட்டணி கட்சியினர், 100 நாள் வேலை திட்டத்தில் உள்ள பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
இதேபோல் வெள்ளக்கோவில் அய்யம்பாளையம் நால்ரோடு பகுதியில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் ஒன்றிய செயலாளர் சந்திரசேகரன். ஈரோடு பாராளுமன்ற உறுப்பினர் பிரகாஷ், உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement