காங்கிரஸ் அரசின் கைப்பாவை காதரை விமர்சித்த விஜயேந்திரா
பெங்களூரு : “காங்கிரஸ் அரசின் கைப்பாவையாக சபாநாயகர் காதர் செயல்படுகிறார்,” என, பா.ஜ., தலைவர் விஜயேந்திரா விமர்சித்துள்ளார்.
சட்டசபையில் பட்ஜெட் புத்தகத்தை கிழித்து எறிந்து போராட்டம் நடத்தியதால், பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் 18 பேரை ஆறு மாதங்கள் சஸ்பெண்ட் செய்து, சபாநாயகர் காதர் உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை திரும்பப் பெறக்கோரி, பெங்களூரு விதான் சவுதா வளாகத்தில் உள்ள கெங்கல் ஹனுமந்தய்யா சிலை முன் நேற்று பா.ஜ., தலைவர்கள் போராட்டம் நடத்தினர்.
அப்போது விஜயேந்திரா அளித்த பேட்டி:
எங்கள் எம்.எல்.ஏ.,க்கள் 18 பேரை, சபாநாயகர் காதர் சஸ்பெண்ட் செய்து இருப்பது அரசியலமைப்புக்கு எதிரானது. காங்கிரஸ் அரசின் கைப்பாவையாக சபாநாயகர் செயல்படுகிறார்.
முதல்வரை திருப்திப்படுத்த சட்டவிரோதமாக இந்த உத்தரவை சபாநாயகர் பிறப்பித்துள்ளார். சபாநாயகர் திமிர் பிடித்தவர் போன்றும், ஆளும்கட்சியின் அழுத்தத்திற்கு அடிபணிந்தவர் போன்றும் நடந்து கொள்கிறார். அவர் தன் போக்கை உடனடியாக மாற்றிக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
எதிர்க்கட்சித் தலைவர் அசோக் கூறியதாவது:
எங்கள் ஆட்சியில் சபாநாயகராக இருந்த யோகேஷ் பட் இழுத்துச் செல்லப்பட்டு தாக்கப்பட்டார். நாங்கள் சபாநாயகருக்கு மரியாதை கொடுக்கிறோம். ஆனால் அவர் ஒருதலைபட்சமாக நடந்து கொள்கிறார்.
சட்டசபை கூட்டத்தொடர் நடக்காதபோது, சபாநாயகர் இருக்கையில் அமர்ந்து அவரது உறவினர்கள், மத தலைவர்கள் புகைப்படம் எடுக்கின்றனர். இது நியாயமா? இதுதான் ஜனநாயகமா?
முஸ்லிம்களுக்கான 4 சதவீத இடஒதுக்கீட்டில் சபாநாயகர் தந்திரமாக நடந்து கொண்டார். அவரது நடவடிக்கை சரியில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும்
-
மாவட்ட கிரிக்கெட்; என்.ஐ.ஏ., கல்வி நிறுவன அணி வெற்றி
-
அரசின் திட்டங்களுக்கு கணக்கு; கூட்டுறவு வங்கிகளில் அபாரம்
-
சைக்கிளிங் போட்டியில் சாதிக்கும் 'ஆட்டிசம்' மாணவர்! 'உடல் ஊனம் தடையில்லை' என்பதற்கு உதாரணம்
-
போதை மாத்திரைகளை கடத்திய 4 வாலிபர்கள் கைது
-
பென்சன் விதிமுறைக்கு எதிர்ப்பு; ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்
-
பனியன் நிறுவன பஸ் கவிழ்ந்து 15 பணியாளர்கள் காயம்