இயக்குநர் பிருத்விராஜ் மனைவி ஒரு நகர்ப்புற நக்சல்; கேரள பா.ஜ. விளாசல்

6

திருவனந்தபுரம்: இயக்குநர் பிருத்விராஜ் மனைவி ஒரு நகர்ப்புற நக்சல் என்று கேரளா பா.ஜ., தலைவர் கோபாலகிருஷ்ணன் விமர்சித்துள்ளார்.



பெரும் எதிர்பார்ப்புடன் வெளியாகி வசூலில் சாதனை படைத்துள்ளது பிருத்விராஜின் எம்புரான் படம். மோகன்லால் கதாநாயகனாக நடித்துள்ள இந்த படம், லூசிபர் படத்தின் 2ம் பாகமாக வெளியாகி உள்ளது.


படத்தில் இடம்பெற்றுள்ள சில காட்சிகள் சர்ச்சையாக, பா.ஜ., தரப்பில் கடும் எதிர்ப்பு எழுந்தது. அதே நேரத்தில் சர்ச்சை காட்சிகளுக்கு வருத்தம் தெரிவித்து, அவற்றை நீக்குவதாக நடிகர் மோகன்லால் கூறி இருந்தார்.


இந் நிலையில், எம்புரான் படத்தை இயக்கிய பிருத்விராஜின் மனைவி ஒரு நகர்ப்புற நக்சல் என்று கேரளா பா.ஜ., தலைவர் கோபால கிருஷ்ணன் விமர்சித்துள்ளார். தமது மகன் பிருத்விராஜை வேண்டும் என்றே குறி வைக்கின்றனர் என்று அவரது தாயார் மல்லிகா சுகுமாறன் கூறியது குறித்து பேட்டி ஒன்றின் போது கோபால கிருஷ்ணனிடம் கேள்வி கேட்கப்பட்டது.


இதற்கு அவர் அளித்த பதில் வருமாறு;


மல்லிகா சுகுமாறன் சினிமாவை பற்றி எதுவுமே பேசவில்லை. அவர் மேஜர் ரவியை பற்றி விமர்சிக்கிறார். தமது மகனை அவர் தனிமைப்படுத்துகிறார் என்று கூறி இருக்கிறார்.


மேஜர் ரவியை விமர்சிப்பதற்கு முன், அவரது வீட்டில் இருக்கும் மருமகளை விமர்சிக்க வேண்டும். கேரளாவில் உள்ள பா.ஜ.,வினர் சுகுமாறனிடம் சொல்ல ஒரே ஒரு விஷயம் இருக்கிறது. அவரது மருமகள் (சுப்ரியா மேனன்) ஒரு நகர்ப்புற நக்சல் என்று விமர்சித்துள்ளார்.


முன்னதாக, எம்புரான் படம் ரிலீசின் போது, இந்த படம் உலகளவில் முக்கிய இடத்தை பிடிக்கும் என்று சுப்ரியா மேனன் ஒரு கருத்தை தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement