பண்ருட்டியி்ல் 35 கிலோ கஞ்சா பறிமுதல் ஆந்திர வியாபாரி உட்பட 10 பேர் கைது

பண்ருட்டி : பண்ருட்டியில் ரயிலில் கஞ்சா கடத்தி வந்த 10 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஆந்திராவில் இருந்து பண்ருட்டிக்கு ரயிலில் கஞ்சா கடத்தி வருவதாக கிடைத்த தகவலின் பேரில் டி.எஸ்.பி., ராஜா மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் வேலுமணி, சப் இன்ஸ்பெக்டர்கள் பிரேம்குமார், தவச்செல்வம், தங்கவேல் மற்றும் போலீசார் நேற்று பண்ருட்டி ரயில்வே ஸ்டேஷனில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, புத்துமாரியம்மன் கோவில் அருகில் பதுங்கி இருந்த 10 பேரை பிடித்து விசாரித்தனர். அதில், அவர்கள் ஆந்திரா மாநிலம், விசாகப்பட்டிணம் பிரதீப்,26; புவனகிரி அருண்குமார்,33; புகழேந்தி,26; ஆகியோர் ஆந்திராவில் இருந்து ரயிலில் கஞ்சா கடத்தி வந்து பண்ருட்டி, நெய்வேலி, கடலுார், சிதம்பரம் பகுதிகளில் உள்ள சில்லரை வியாபாரிகளுக்கு விற்பனை செய்வது தெரிந்தது.
இவர்களிடமிருந்து பண்ருட்டி ஜெயசுமன்,25; கடலுார் ஜீவானந்தம்,25; தோப்புக்கொல்லை அஜய்குமார்,20; ஜீவா,20; கிருஷ்ணசெல்வம்,18; ஜாக், 20; புலவன்குப்பம் கிங் (எ) ராஜா,27; ஆகியோர் சில்லறை விற்பனைக்கு வாங்க வந்ததும் தெரிந்தது. அதன்பேரில் பண்ருட்டி போலீசார் வழக்கு பதிந்து 10 பேரையம் கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்த 35 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
மேலும்
-
டாஸ்மாக் ரெய்டுக்கு எதிரான வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்யணும்: ஐகோர்ட்டில் அமலாக்கத்துறை மனு
-
குளம் தூர் வாரும் பணி துவக்க விழா
-
பெருமைக்குரிய அம்மா
-
பெண்ணுக்கு பாலியல் தொல்லை: பாதிரியாருக்கு ஆயுள் தண்டனை
-
கும்பகோணம் வெற்றிலை, தோவாளை மாணிக்க மாலைக்கு புவிசார் குறியீடு
-
2026ல் மார்ச் 31க்குள் நக்சலிசம் ஒழிக்கப்படும்; அமித்ஷா திட்டவட்டம்