கட்சி பாகுபாடின்றி நிதி ஒதுக்கீடு: இ.பி.எஸ்.,க்கு முதல்வர் ஸ்டாலின் பதில்

சென்னை: கட்சி பாகுபாடின்றி அனைத்து தொகுதிகளின் நலத்திட்டங்களுக்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது என இ.பி.எஸ்., எழுப்பிய கேள்விக்கு முதல்வர் ஸ்டாலின் பதில் அளித்தார்.
சட்டசபையில், அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., பேசுகையில், 'அ.தி.மு.க., உறுப்பினர்கள் கோரிக்கை வைக்கும் பெரும்பாலான திட்டங்கள் சாத்தியமில்லை என திருப்பி அனுப்பப்படுகிறது. எனது தொகுதி சார்பாக முன்வைக்கபட்ட 10 கோரிக்கைகளில் இரண்டை மட்டுமே ஏற்று கொண்டனர்' என குற்றம் சாட்டினார்.
முதல்வர் பதில்
இதற்கு முதல்வர் ஸ்டாலின் பதில் அளித்து பேசியதாவது: ஒவ்வொரு உறுப்பினரும் தங்கள் தொகுதி சார்ந்து 10 கோரிக்கைகளை வழங்க வேண்டும்; அதை நிறைவேற்றுவதே நோக்கம். கட்சி பாகுபாடின்றி அனைத்து தொகுதிகளின் நலத்திட்டங்களுக்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. முதல்வர் திட்டத்தை நானே நேரடியாக 2 மாதத்துக்கு ஒருமுறை ஆய்வு செய்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
நூலகத்திற்கு காமராஜர் பெயர்
சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்புகள் பின்வருமாறு:
* திருச்சியில் ரூ.290 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும் நூலகத்திற்கு காமராஜர் பெயர் சூட்டப்படும்.
* கோவை, திருச்சி நூலகத்திற்கான பணிகள் வேகமாக நடைபெறுகின்றன.
*மதுரை நூலகம் ஓராண்டில் கட்டிமுடிக்கப்பட்டு இதுவரை 14 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறினார்.







மேலும்
-
லாலு பிரசாத் யாதவ் கவலைக்கிடம்
-
பிரியாணி, சவர்மா சாப்பிட்டவர்களுக்கு வாந்தி, பேதி; பிலால் ஹோட்டலுக்கு சீல்
-
அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் அ.தி.மு.க., எம்.பி., தம்பிதுரை சந்திப்பு
-
வெப்ப அலை எதிரொலி; கர்நாடகாவில் அரசு அலுவலக நேரத்தில் மாற்றம்
-
தேனீக்கள் கொட்டியதில் கேரள சுற்றுலாப் பயணி பலி
-
வெம்பக்கோட்டை அகழாய்வில் தங்கத்தில் செய்த மணி கண்டெடுப்பு!