தனித்துப் போட்டியிடுவது தான் வீரம்: சீமான்

31


திருச்சி: 'நான் என் எதிரியை தனித்து தான் சந்திப்பேன்' என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.


திருச்சியில் நிருபர்கள் சந்திப்பில், 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் த.வெ.க., மற்றும் தி.மு.க.,வுக்கு இடையே தான் போட்டி என விஜய் கூறியுள்ளார் என கேள்வி எழுப்பப்பட்டது.


இதற்கு சீமான் அளித்த பதில்: அதை வரவேற்கிறேன். தி.மு.க., உடன் மோதி அழிக்கணும், அதை வீழ்த்தணும் என நினைக்கும் எனது தம்பி நிலைப்பாட்டை வரவேற்கிறேன்.


நிருபர்: தி.மு.க.,வை வீழ்த்தணும் என நினைப்பவர்கள் எல்லாம் பிரிந்து இருக்கிறார்களே?



சீமான்: பிரிந்து எங்க இருக்கிறோம். நான் வந்து ஆள் சேர்த்து கொண்டு சண்டைக்கு போகிற மரபு எனக்கு இல்லை. எங்களது அண்ணனை உலக நாடுகள் படைகளை எதிர்க்க வந்தார்கள்.
நான் என் எதிரியை தனித்து தான் சந்திப்பேன். ஒரு நாய் நான்கு நாயை சேர்த்து கொண்டு வேட்டைக்கு சென்றால் சரியாக இருக்கும்.


ஒரு புலி 10 புலிகளை சேர்த்து கொண்டு வேட்டைக்கு சென்றால் சரியாக இருக்காது. கூட்டத்தில் நிற்க வீரமோ, துணிவோ தேவையில்லை. தனித்து நிற்க தான் வீரம், துணிவு தேவை. நாங்கள் வீரர்கள், தனித்து நின்று மோதுகிறோம்.


அவர் செய்கிறார். நீங்கள் செய்யவில்லை என கேட்கிறீர்கள். 100 பேர் கேட்கிறீர்கள், கூட்டணி இல்லாமல் எப்படி என்று, ஒருவர் கூட கொள்கை இல்லாமல் எப்படி என்று கேட்பதில்லை. எதிரியை தீர்மானித்து விட்டு களத்திற்கு வந்தவர்கள் நாங்கள்.



யாரை வீழ்த்த வேண்டும் என்று முடிவு எடுத்துவிட்டு போருக்கு வந்து இருக்கிறோம். எந்த குழப்பமும் இல்லை. தடுமாற்றமும் இல்லை. 4 மாதத்தில் யார் யாருடன் செல்கிறார்கள் என்பது தெரிந்துவிடும்.


நாங்கள் எங்கே நிற்கப்போகிறோம் என்று தெரிந்துவிடும். எங்களுக்கு எந்த குழப்பமும் இல்லை. உங்களுக்கு குழப்பம் இருந்தால், தெளிவாக இருங்கள். இவ்வாறு சீமான் கூறினார்.

Advertisement