மன் கி பாத் 120வது நிகழ்ச்சி: தமிழ் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி

புதுடில்லி: இன்று 120வது மன் கி பாத் நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி, திருப்பூரில் செயல்படும் சாயக்கழிவு நீர் சுத்திகரிப்பு ஆலைகளின் பணியை பாராட்டினார்.
மன் கிபாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: பள்ளித் தேர்வுகள் முடிந்து கோடை விடுமுறை காலம் துவங்க உள்ள நிலையில், தன்னார்வ சேவைகளில் மாணவ, மாணவிகளை ஈடுபடுத்தும் நிகழ்ச்சிகளுக்கு பள்ளிகள், சேவை அமைப்புகள் ஏற்பாடு செய்ய வேண்டும். கோடை காலத்தில் நீரை சேமிக்க வேண்டும்.
யோகா, மருத்துவம்
உலகம் முழுவதும் யோகா, பாரம்பரிய மருத்துவம் குறித்து ஆர்வம் அதிகரித்து வருகிறது. யோகா தினத்திற்கு இன்னும் 100 நாட்களுக்கு குறைவாகவே இருக்கிறது. யோகா மூலம் உலகம் முழுவதையும் ஆரோக்கியமாக மாற்ற விரும்புகிறோம். சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற கேலோ இந்தியா பாரா விளையாட்டுப் போட்டிகளில் வீரர்கள் தங்கள் அர்ப்பணிப்பு மற்றும் திறமையால் அனைவரையும் ஆச்சரியப்படுத்தினர்.
தமிழ் புத்தாண்டு வாழ்த்து
உலகில் அதிக ஜவுளிக் கழிவுகள் உருவாகும் 3வது நாடு இந்தியா. நமது பண்டிகைகள் நாட்டின் வேற்றுமையில் ஒற்றுமையைக் காட்டுகின்றன. ஈத், தமிழ் புத்தாண்டு உள்ளிட்ட பண்டிகைகளை கொண்டாடும் மக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.
ஜவுளி கழிவுகளை மறுசுழற்சி செய்வதில் இந்தியா பிரபலம் அடைந்து வருகிறது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
பாராட்டு
திருப்பூரில் சாய ஆலைகள் இயங்கி வருகிறது. இந்த ஆலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர், சுத்திகரிப்பு ஆலைகளுக்கு கொண்டு சென்று, மறுசுழற்சி செய்கின்றனர். இதன் மூலம் கிடைக்கும் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் நொய்யல் ஆற்றில் கலக்கப்படுகிறது.
கழிவு நீரில் இருந்து பிரித்து எடுக்கப்படும் உப்பு முழுவதும், நல்ல விஷயங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது. திருப்பூர் தொழில் துறையினரின் கழிவு நீர் சுத்திகரிக்கும் பணியையும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி பணிகளையும், இன்றைய மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பாராட்டினார்.








மேலும்
-
குஜராத்தில் பட்டாசு ஆலையில் பயங்கர தீ விபத்து; 13 பேர் பலி; 6 பேர் காயம்
-
நீலகிரி மாவட்ட வாகனங்களுக்கு இ-பாஸ் அவசியமில்லை: கலெக்டர் அறிவிப்பு
-
அன்போடு... அன்போடு... அன்போடு...! பா.ஜ., எம்.எல்.ஏ.,வுக்கு முதல்வர் பதில்
-
காசாவில் 10 நாட்களில் 322 குழந்தைகள் பலி
-
மலேசியாவில் காஸ் குழாய் வெடித்தது; தீப்பிழம்புகள் எழுந்ததால் பரபரப்பு!
-
டாஸ்மாக் ரெய்டுக்கு எதிரான வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்யணும்: ஐகோர்ட்டில் அமலாக்கத்துறை மனு