குப்பையை தரம் பிரிக்க மாணவர்கள் விழிப்புணர்வு
உத்திரமேரூர்:உத்திரமேரூர் பேரூராட்சியில், சர்வதேச பூஜ்ஜிய கழிவு தினத்தை முன்னிட்டு, சகாய தோட்டம் தொன் போஸ்கோ வேளாண்மை கல்லுாரி மாணவர்கள் சார்பில், குப்பையை தரம் பிரிப்பது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
அதில், பேரூராட்சியில் பணியாற்றும் திடக்கழிவு மேலாண்மை கிடங்கு துாய்மை பணியாளர்களுடன், வேளாண்மை கல்லுாரி மாணவர்கள் சேர்ந்து, ஒவ்வொரு வீடாக சென்று குப்பையை தரம் பிரிப்பது குறித்து செயல் விளக்கம் காட்டினர்.
தொடர்ந்து, குப்பை பிரிப்பது குறித்த வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியபடி, துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement