மாணவி மாயம்

நடுடுவீரப்பட்டு : நடுவீரப்பட்டு அருகே இளம்பெண் மாயமானது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

நடுவீரப்பட்டு அடுத்த சன்னியாசிப்பேட்டையை சேர்ந்தவர் நாகராஜ் மகள் அபிநயா,19; இவர் கடலுார் கல்லுாரியில் படித்து வருகிறார். கடந்த 28ம் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற அவர், மீண்டும் வீடு திரும்பவில்லை. எங்கு தேடியும் கிடைக்கவில்லை. புகாரின் பேரில், நடுவீரப்பட்டு போலீசார் வழக்கு பதிந்து அபிநயாவை தேடி வருகின்றனர்.

Advertisement