கஞ்சா விற்ற சகோதரர்கள் கைது

படப்பை,படப்பை அருகே மாடம்பாக்கம் வள்ளலார் நகரை சேர்ந்த முகமது சதாம் உசேன், 29. இவரது தம்பி முகமது இம்ரான் கான், 24.

ரவுடிகளான இருவரும், அதே பகுதியை சேர்ந்த பிரவீன் குமார், 24, என்பவருடன் சேர்ந்து, படப்பை, மாடம்பாக்கம், காட்டாங்கொளத்துார் பகுதியில், கல்லுாரி மாணவர்களுக்கு கஞ்சா விற்று வந்தனர்.

தலைமறைவாக இருந்த இவர்களை, மணிமங்கலம் போலீசார் நேற்று மாடம்பாக்கத்தில் சுற்றி வளைத்தனர்.

அப்போது, மதில் சுவர் மீது ஏறி குதித்து தப்பியோட முயன்ற முகமது சதாம் உசேன் கீழே விழுந்ததில், அவரது வலது கால், இடது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது.

இதையடுத்து, மூவரையும் கைது செய்த போலீசார், இவர்களிடம் இருந்து, 1.3 கிலோ கஞ்சா, ஒரு பட்டா கத்தியை பறிமுதல் செய்தனர்.

Advertisement