கலையரங்கம் திறப்பு

நத்தம் : -நத்தம் சிரங்காடுபட்டி ஊராட்சி மங்களப்பட்டியில் எம்.எல்.ஏ., மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.10 லட்சம் மதிப்பில் புதிய கலையரங்கம் கட்டப்பட்டு அதற்கான திறப்பு விழா நடந்தது. முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் தலைமை தாங்கி கலையரங்கத்தை திறந்து வைத்தார். அ.தி.மு.க., ஜெயலலிதா பேரவை இணை செயலாளர் ஆர்.வி.என்.கண்ணன், ஒன்றிய செயலாளர்கள் சின்னு, மணிகண்டன், மாவட்ட ஜெயலலிதா பேரவை இணை செயலாளர் ஜெயபாலன், சாணார்பட்டி ஒன்றிய இணை செயலாளர் விஜயன், அ.தி.மு.க., நகர அவைத் தலைவர் சேக்ஒலி, முன்னாள் ஊராட்சி தலைவர்கள் செல்விவீரன், சவரிமுத்து, தேன்மொழி முருகன் பங்கேற்றனர்.

Advertisement