டிராக்டர்  கவிழ்ந்து டிரைவர் பலி 

நயினார்கோவில் : -பாண்டியூர் அருகே செவ்வூரில் டிராக்டர் கவிழந்து டிரைவர் பலியானார். கீழக்கரை தாலுகா வித்தானுார் வீரமணி மகன் பிரபு 36. இவர் டிராக்டரை வித்தானுாரிலிருந்து பாண்டியூருக்கு ஓட்டி வந்து கொண்டிருந்தார். செவ்வூர் அருகே வந்த போது டிராக்டர் நிலை தடுமாறி கவிழ்ந்தது. இதில் டிராக்டரை ஓட்டி வந்த பிரபு உயிரிழந்தார். நயினார் கோவில் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement