சிறுதானிய விவசாயிகளுக்குவேளாண் மாணவியர் பயிற்சி


சிறுதானிய விவசாயிகளுக்குவேளாண் மாணவியர் பயிற்சி


பாப்பிரெட்டிப்பட்டி:--பாப்பாரப்பட்டி வேளாண் அறிவியல் நிலையத்தில், திருவண்ணாமலை வேளாண் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின், 4ம் ஆண்டு மாணவியர், பிரியங்கா, பிரேமலதா, பிரியதர்ஷினி, பானுப்பிரியா உள்ளிட்டோர் கிராம அனுபவம் குறித்து, பயிற்சி பெற்று வருகின்றனர்.
இவர்கள் பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த பில்பருத்தி, பொம்மிடி, ஜம்மனஹள்ளி உள்ளிட்ட கிராம விவசாயிகளுக்கு, விதை முளைப்புத்திறனை ஊக்குவிக்குதல், விதை கடினப்படுத்துதல், நோயை கட்டுப்படுத்துதல், விதை நேர்த்தி மற்றும் சிறுதானியங்களின் முக்கியத்துவத்தை விளக்கினர்.
விதை கடினப்படுத்தும் முறை அதன் பல்வேறு பயன்பாடுகளை பற்றி மாணவியர் செயல்முறை விளக்கம் அளித்தனர். சிறுதானியங்கள் விதைப்பு பற்றி பயிற்சி அளிக்கப்பட்டது. இதில், 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Advertisement