ஆம்னி பஸ் கவிழ்ந்து மாற்று டிரைவர் பலி


ஆம்னி பஸ் கவிழ்ந்து மாற்று டிரைவர் பலி


தர்மபுரி:ராமேஸ்வரத்திலிருந்து மார்ச், 31 மாலை, 6:00 மணிக்கு தனியார் ஆம்னி பஸ் ஒன்று, 33 பயணிகளை ஏற்றிக் கொண்டு, பெங்களூரு புறப்பட்டது. பஸ்சை பெரம்பலுார் மாவட்டம், கீழ்கணவாயை சேர்ந்த சூசை மாணிக்கம், 54, என்பவர் ஓட்டி வந்தார். நேற்று அதிகாலை, 5:30 மணிக்கு, சேலம் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், எம்.ஜி.ஆர்., ஓட்டல் அருகே வந்தபோது, சென்டர் மீடியனில் மோதிய பஸ்
கவிழ்ந்தது.இதில், வேலுார் மாவட்டத்தை சேர்ந்த மாற்று டிரைவர் நடராஜ், 55, சம்பவ இடத்திலேயே பலியானார். கர்நாடகா மாநிலம் உடுப்பியை சேர்ந்த பூர்ணிமா, 24, காரைக்குடி மாசிலாமணி, 61, ஓசூர் கவிதா, 34, கர்நாடகா மாநிலம் உடுப்பி சனத், 24, டிரைவர் சூசைமாணிக்கம் ஆகியோர் பலத்த காயமும், 10 லேசான காயமும் அடைந்தனர். அவர்களை போலீசார் மீட்டு, அவசர ஆம்புலன்ஸ் மூலம், தர்மபுரி அரசு மருத்துவ மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தர்மபுரி டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement