வீடுகளில் பட்டாசு தயாரிப்பு தடுக்க தேவை போலீசார் ரோந்து

சாத்துார் : சாத்துார், சுற்றுப்பகுதியில் வீடு தோட்டங்களில் பட்டாசு தயாரிப்பதை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வெம்பக்கோட்டை தாலுகாவில் மட்டுமே வீடுகளில் வைத்து பட்டாசு தயாரிப்பது நடந்து வந்தது இந்த நிலையில் கொஞ்சம் கொஞ்சமாக பரவி தற்போது சாத்துார், சுற்றுப் பகுதியில் உள்ள தோட்டங்களிலும் வீடுகளிலும் பட்டாசு தயாரிக்கும் பணிகள் மறைமுகமாக நடந்து வருகிறது.

தாயில்பட்டி, விஜய கரிசல்குளம் உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளில் பட்டாசு தயாரித்த போது ஏற்பட்ட வெடி விபத்தில் பலர் காயம் அடைந்து சில உயிர் பலி ஏற்பட்டது. இதன் காரணமாக அந்தப் பகுதிகளில் வீடுகளில் பட்டாசு தயாரிப்பதை தீவிரமாக கண்காணித்து போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் வீடுகளில் மட்டுமின்றி தோட்டங்களிலும் காட்டுப்பகுதியிலும் பட்டாசு தயாரிப்பது குறைந்து வருகிறது.

போலீசாரின் கெடுபிடி காரணமாக அந்தப் பகுதியில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரிப்பது குறைந்து வரும் நிலையில் சாத்துார், சுற்று பகுதியில் உள்ள வீடுகள், தோட்டங்களில் மறைமுகமாக சட்டவிரோதமான பட்டாசு தயாரிப்பில் சிலர் ஈடுபட்டு வருகின்றனர். போலீசார் அவ்வப்போது ரோந்து சுற்றி வந்து பட்டாசு தயாரிப்பில் ஈடுபடுபவர்களை கைது செய்து வருகின்றனர்.

இருந்த போதும் இதுபோன்ற சட்டவிரோதமாகவும் அனுமதியின்றியும் பட்டாசு தயாரிப்புசெய்வது மக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் செயல் என்பதை உணராமல் சிலர் இதில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே போலீசார் தீவிரமாக கண்காணித்து தடுக்க வேண்டும்.

Advertisement