நாய் கடித்து கன்று குட்டி பலி

திருவாடானை : திருவாடானை அருகே அடுத்தகுடி கிராமத்தை சேர்ந்தவர் சுந்தரம்பாள். இவருக்கு சொந்தமான பசு கன்று குட்டி வயல்காட்டில் மேய்ந்து கொண்டிருந்தது. நாய்கள் விரட்டி கடித்ததில் கன்று குட்டி இறந்தது. கால்நடை டாக்டரின் பரிசோதனைக்கு பின் புதைக்கபட்டது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. இரவில் வெளியில் நடமாட முடியவில்லை. நாய் கடியால் ஏராளமான மான்கள், ஆடுகள் இறந்துள்ளது. நடந்து செல்லும் சிறுவர்கள் அச்சமடைந்துள்ளனர். சம்பந்தபட்ட அலுவலர்கள் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Advertisement